Guru Peyarchi 2016


2017 Guru Peyarchi Rasi Palan- 2017

2017 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - 2017
குரு பெயர்ச்சி பலன்கள் 2016
(02-ஆகஸ்ட் -2016 முதல் 01-செப்டெம்பர்-2017 வரை)

ஆண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய குரு பெயர்ச்சி இந்த வருடம் 02-08-2016 அன்று நிகழ்கிறது. துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:30 மணிக்கு உத்திர நட்சத்திரம் 1-ம் பாதம் முதல் உத்திர நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.

9 கோள்களில் சுபகோளாக, வியாழன், குரு, பொன்னவன், தேவ குரு, தனகாரகன், புத்திகாரகன் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் குரு பகவான், ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது குடும்பம் நல்ல முறையில் இருக்கும்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு 13 மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஆகும். இப்படி ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம்.

குரு பார்க்க கோடி நன்மை என்றும், கோடி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது. குரு பெயர்ச்சியினால் நன்மைகள் நடக்கும் என்று பொதுவாக நம்பலாம், எதிர்பார்க்கலாம்.

ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி, லக்னம் ஆகியவை பொருத்தும், ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார், அதுவே நடக்கும். தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குரு பகவானால் நன்மையே நடக்கும். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வழிபடுவது எல்ல வகையிலும் நன்மை தரும்.

இந்த வருடம் குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கன்னி ராசி குரு பகவானின் நட்பு வீடுதான். குரு நட்பு வீட்டிற்கு செல்வதால் நன்மையே செய்வாரு என்று நம்பலாம்.

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) செவ்வாய்க்கிழமை காலை 09:30 மணிக்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

திருக்கணித முறைப்படி துர்முகி வருடம் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) வியாழக்கிழமை இரவு 09:30 மணிக்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

பெரும்பாலும் தமிழக கோவில்களில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி எல்லாம் வாக்கிய பஞ்சாங்கப்படி தான் நடக்கிறது.

குரு பகவானுக்கு முக்கிய தலமாக கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி பிரசித்தியாக கருதப்படுகிறது.

குரு பலன் தரும் ராசிகள்:
ரிஷபம் - சிம்மம் - விருச்சிகம் - மகரம்

குரு பலன் தரா ராசிகள்:
மேஷம் - கடகம் - துலாம் - கும்பம்

குரு சம பலன் தரும் ராசிகள்:
மிதுனம் - கன்னி - தனுசு - மீனம்

குருவுக்கு பரிகாரம்:
1. குரு தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்வது உத்தமம்.
2. நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை வழிபடுவது சிறப்பு.
3. தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் சிறப்பு.
4. ஏழை எளிய மக்களுக்கு இயன்ற வரை அன்னதானம் செய்வதும் குருவுக்கு செய்யும் பரிகாரம் ஆகும்.
5. வியாழக்கிழமை, பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவசமாதிக்கு முறையாக சென்று வழிபட்டால் குருவால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கி குரு அருள் கிடைக்கும்.

6. குரு காயத்ரீ மந்த்ரம் :

ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி |
தன்னோ குரு : ப்ரசோதயாத் ||

ஓம் சுராசார்யாய வித்மஹே
வாசஸ்பத்யாய தீமஹி |
தன்னோ குரு : ப்ரசோதயாத் ||
   மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, மேஷ ராசிக்கு இதுவரை 5ம் இடத்தில இருந்த குரு இப்போது 6ம் இடமான கன்னி ராசிக்கு மாறுகிறார். சிம்மத்தில் இருந்து கன்னிக்கு இடப்பெயர்ச்சி ஆகும் குரு பொதுவான பலன்களே தருவார். (பொதுவாக 3, 6, 8, 12 ம் இடங்கள் குருவுக்கு துர்பலன்களை தரக்கூடிய இடங்கள் ஆகும்.) குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 10, 12, 2 ஆகிய இடங்களில் படுவதால் ஏராளமான நன்மைகளும் நடைபெறும். உங்கள் ராசிக்கு குரு 9, 12க்கு உடையவர், அவர் 6ல் மறைகிறார். இது அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் குரு பகவானின் 10, 12, 2 இடங்கள் பார்வையால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சுப பலன்கள் கிட்டும். 12ம் இடத்தை குரு பார்ப்பதால் சையன, போஜன, போக சுகம், ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. 2ம் இடத்தை குரு பார்ப்பதால் குடும்பம் விருத்தி பெரும், தன வசதி பெருகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். ஒரு சிலருக்கு எழுத்தார்வம் கூடும். நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் நல்ல உதவியும் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவும் கிட்டும். பெண்களுக்கு நல்ல குடும்பம் அமையும். குடும்பத்தினர் அனைவருக்கும் நல்லது நடக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை, வெளிநாடு யோகம் போன்றவை அமையும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட சுப காரியங்கள் நடைபெறும். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். 6ல் உள்ள குரு பகவான் எப்படி பார்த்தாலும் பல வகையில் நன்மைகளை செய்து இந்த குரு பெயர்ச்சியை உங்களுக்கு சாதகமாக மாற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
   ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, ரிஷப ராசிக்கு இதுவரை 4ல் இருந்த குரு இப்போது 5ம் இடமான கன்னி ராசிக்கு மாறுகிறார். பொதுவாக 2, 5, 7, 9, 11 ஆம் இடங்கள் குருவுக்கு யோகமான இடங்கள். இந்த குரு பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம், யோகம் உங்களுக்கு கிடைக்க பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 8க்கும் 11க்கும் உடைய குரு நன்மை செய்யும் கிரகம் அல்ல என்றாலும் அதன் சுப பார்வை நன்மையை மட்டுமே நிச்சயம் செய்யும். உங்கள் ராசிக்கு 9, 11 ஆகிய மூன்று இடங்களுக்கு பார்வை கிடைப்பதால் மிகப்பெரிய நன்மைகள் நடைபெறும் என்று உறுதியாக சொல்ல முடியும். குரு உங்கள் ராசிக்கு 8க்கு உடையவராக இருப்பதால் அதன் பார்வை மிகப்பெரிய நன்மையை செய்ய போகிறது. நட்பு வீடான கன்னியில் அமர்ந்து ராசியை பார்க்க போகும் குருவால் ஏராளமான நன்மைகள் கிடைக்க போகிறது. குறிப்பாக ஆரோக்கிய விஷயத்தில் எல்லா குறைபாடுகளும் முழுவதும் நீங்கிவிடும். 11க்கு உடையவர் 8ல் அமர்ந்து தன வீட்டை பார்ப்பது வெகு நன்மை. வளமான குடும்பம் அமையும். நிறைய புத்திர பாக்கியம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் அன்பும் ஆதரவும் கிட்டும். தந்தை உதவியால் உத்தியோகம் / தொழில் அமையும். புத்திரர்களால் தனம், கெளரவம் ஆகியவை கிட்டும். வீடு நிலம் வண்டி வாகனம் வேலை ஆட்கள் போன்ற வசதிகள் அமைத்து கொள்ள வாய்ப்பு கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்படும். திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் தாமதப்படலாம். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலர் காதல் விவகாரங்களில் ஈடுபடக்கூடும். கவனம் தேவை. உடல் நிலை பொருத்தவரை உணவு விஷயங்களில் கவனம் தேவை. எப்படி பார்த்தாலும் குரு பெயர்ச்சி ஏற்றமான பலன்களே தரும்.
   மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, மிதுன ராசிக்கு இதுவரை 3ம் இடத்தில மறைவு பெற்றிருந்த குரு இப்பொழுது 4ம் இடத்திற்கு வருகிறார். கன்னி ராசிக்கு 4ம் இடமாகிய கன்னிக்கு வரும் குரு 8, 10, 12 ஆகிய ராசிகளை பார்க்கவிருக்கிறது. குரு 8ம் வீடான மகரத்தையும், 10ம் வீடான மீனத்தையும் 12ம் வீடான ரிஷபத்தையும் பார்க்க போகிறது. இக்காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். குரு பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது படுவதால் தொழில் வளர்ச்சி குறிப்பிட்டு சொல்லும்படி மிக மிக சிறப்பாக இருக்கும். விட்டுப்போன தொழிலை மீண்டு ஆரம்பித்து வெற்றி காண்பீர்கள். குருவின் 5, 7, 9ம் பார்வைகள் மிதுன ராசிக்கு 8, 10, 12ம் வீடுகளில் விழுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்ற சொல்லுக்கு ஏற்ப 8, 10, 12ம் வீடுகள் சிறப்பாக அமையும். பொதுவாக 7, 10க்கு உடைய குரு 4ல் இருந்து கேந்திரபத்திய தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் 10க்கு உடைய குரு 4ல் அமர்ந்து தன வீடான 10ம் இடத்தை பார்ப்பது யோகமே. ஆகையால், குரு யோகத்தை மட்டுமே கொடுக்கும். கெடு பலனை கொடுக்காது. வேலை இல்லாதோருக்கு வேலையும், வேளையில் இருப்போர்க்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, கெளரவம், புகழ் ஆகியன கிடைக்கும். வீடு வாகனம் நிலம் போன்ற வசதிகளும் அமையும். புதிய நண்பர்களின் சேர்க்கை கிட்டும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த தொழில் விருத்தி அடையும். 12ம் இடமாகிய விரய ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். திருமணம், வீடு கட்டுதல், பிள்ளைகளின் படிப்பு போன்ற காரணங்களுக்காக இருக்கலாம். நீண்ட நாள் எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் கைகூடும். 8ம் இடமாகிய மாங்கல்ய ஸ்தானத்தையும், 12ம் இடமாகிய அயன சயன ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் திருமணங்கள் இனிதே நடைபெறும்.
   கடகம்
கடக ராசி அன்பர்களே, கடக ராசிக்கு இது வரை 2ம் இடத்தில இருந்து மிகவும் அற்புதமான பலன்களை தந்து கொண்டு இருந்த குரு இப்போது ராசிக்கு 3ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பாக அமையும் என்று சொல்லிவிட முடியாது. மேலும் 3ம் இடமாகிய மறைவு ஸ்தானத்திற்கு குரு வருவது பொதுவாக நன்மை தர கூடியது அல்ல. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களுக்கு கிடைப்பதால் மிக பெரிய நன்மைகள் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய பாவங்களுக்கு உரியவர். குரு 6க்கும் 9க்கும் உடையவர். அவர் மூன்றாம் இடத்தில மறைவதால் யோகம் என்று சொல்லலாம். 9க்கு உடையவர் 9ம் இடத்தை பார்ப்பதும் யோகம் தான். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் கைகூடும். திருமண ஆனவர்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் மிக பெரிய பாக்கியங்கள் ஏற்பட போகிறது. நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர்பார்த்த உயர் பதவிகள் இப்போது கிடைக்கும். லாப ஸ்தானமாகிய 11ம் இடத்தை குரு பார்த்துக்கொண்டு இருப்பதால் பொருளாதார ரீதியாக இருந்த அணைத்து தடைகளையும் உடைத்து எரிவீர்கள். வாங்கிய கடனை திரும்ப அடைத்துவிடுவீர்கள். செல்வ செழிப்பு மிகுதியாகும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும். தொழில் வருமானம் அதிகமாக கிடைக்கும். பெரியோரின் அன்பும் ஆசியும் கிடைத்து குரு பெயர்ச்சியை சிறப்பாக பயன்படுத்தி கொள்வீர்கள்.
   சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, சிம்ம ராசிக்கு இதுவரை சிம்ம ராசியிலேயே இருந்து வந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ம் இடமான கன்னி ராசிக்கு இடம் மாறுகிறார். இது மிகவும் சிறப்பான இடம். தனஸ்தானம், வாக்குஸ்தானம், குடும்பஸ்தானம் ஆகியவற்றில் குரு இருப்பது சிறப்பான பலனை தரும். அதே சமயம் 5, 8ம் வீடுகளுக்கு ஆதிபத்தியம் பெறுவதால் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டிய பலன் நல்லதும் கெட்டதும் சேர்ந்ததைப்போல இருக்கும். இந்த வேளையில் மன உறுதியுடன் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் பேச்சுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை இருக்கும். காதல் விவகாரங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் கைகூடும். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியாகிய குரு 2ம் இடத்தில கன்னிக்கு வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. குரு 5, 8க்கு உடையவர் 2ம் பாவத்தில் சஞ்சரிப்பது நல்லது. ஆயுள் பலம் விருத்தி ஆகும். புத்திரர்களால் நன்மையே நடக்கும். 2ம் இடத்தில 6, 8, 10ம் பாவத்தை பார்ப்பார். 6ம் இடத்தை பார்ப்பதால் பகைமை விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். கடன்கள் நிவர்த்தியாகும். 8ம் இடத்தை பார்ப்பதால் ஆயுள் பலம் கூடும். ஆரோக்கியம் மேம்படும். தடைகள் விலகி காரியம் கைகூடும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு உத்தியோகம் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் வளர்ச்சி அடையும். எப்படி பார்த்தாலும் 2ம் இடத்தில இருக்கும் குரு நல்லதையே செய்வார் என உறுதியாக நம்பலாம்.
   கன்னி
கன்னி ராசி அன்பர்களே, கன்னி ராசிக்கு இதுவரை 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருந்து அதிகப்படியான செலவுகளை தந்து கொண்டு இருந்த குரு பகவான் இப்போது கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். ஜென்ம ராசியில் குரு இருப்பது பொதுவாகவே பலம் பொருந்திய அமைப்பாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போகும் சூழ்நிலை உருவாகும். இது வரை 12ம் இடத்தில இருந்த குரு மிகுந்த அலைச்சலையும் சேமிக்க முடியாத செலவுகளையும் கொடுத்து இருப்பார். குரு பெயர்ச்சி அதை முழுவதுமாக மாற்றி விடும். ஜென்ம குருவாக இருந்து 5, 7, 9ம் இடங்களை பார்வையிடும் குருவால் கன்னி ராசியின் 5, 7, 9ம் இடங்கள் பலம் பெறுகிறது. 5ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். அவ்விடத்தை குரு பார்ப்பதால் உயர் பதவிகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண வயதில் உள்ளோர்க்கு வெகு விரைவில் மணவாழ்க்கை அமையும். 7ம் இடத்தை குரு பார்ப்பதால் திருமணம் கைகூடும். 7ம் இடம் என்பது வாழ்க்கை துணையை மட்டும் சொல்வதல்ல, கூட்டு தொழிலை பற்றி சொல்வதும் 7ம் இடம் தான். கூட்டு தொழிலில் மிக பெரிய வெற்றியை இப்போது பார்க்க முடியும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும் உங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை. வேலைபழுவையும் வீண் அலைச்சலையும் தவிர்ப்பது நல்லது. 9ம் இடத்தை குரு பார்ப்பதின் மூலம் அணைத்து வகையான செல்வங்களையும் அடையப்போகிறீர்கள் என்று இந்த குரு பெயர்ச்சி சொல்கிறது.
   துலாம்
துலாம் ராசி அன்பர்களே, இது வரை லாப ஸ்தானத்தில் இருந்துவந்த குரு பகவான் சிம்மத்திலிருந்த இடப்பெயர்ச்சியாக உங்கள் ராசிக்கு 12ம் இடமான கன்னி ராசிக்கு செல்கிறார். பொதுவாக குரு 12ல் இருப்பது பணம் பல வகையில் விரயமாகும். துலாம் ராசிக்கு 3க்கும் 6க்கும் உடைய குரு 12ல் இருப்பது நல்லது தான். இப்போது நடக்கும் குரு பெயர்ச்சியில் நன்மை செய்யாத கிரகமான குரு 12ல் மறைவதால் நன்மையே. குரு 12ல் இருந்தாலும் தனது 5, 7, 9ம் பார்வையாக துலாம் ராசிக்கு 4, 6, 8ம் இடங்களை பார்க்கிறார். 4ம் இடம் என்பது வீடு மனை, தாய் வழி உறவினர், வாகன சுகம் ஆகியவற்றை குறிக்கும். அவ்விடத்தை குரு பார்ப்பதால் வீடு வாங்கும் யோகம் உண்டு. குரு 3, 6க்கு உடையவர். தொழிலை பொறுத்தவரை நல்ல யோகம், பெரிய பதவி கிட்டும். சிலருக்கு வெளிநாட்டுக்கு செல்லவும் வாய்ப்பு உண்டாகும். குரு பார்வை 6ம் வீட்டிற்கு கிடைப்பதால் கடன் கட்டுக்குள் இருக்கும். 12ல் வரும் குரு வருமானம் இன்றி செலவுகளை அதிகப்படுத்துவார். சகோதரனிடம் கருத்து வேற்றுமை உண்டாகும். பல விதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும். வீண் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். பணியில் நிம்மதி குறைவாக இருக்கும். குரு உங்களுக்கு 6க்கு உடையவர், 12ல் வந்து யோகத்தை கொடுப்பார், எதிர்பாராத பல நன்மைகள் நடக்கலாம். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் நலம் நன்றாக இருக்கும். மருத்துவ செலவுக்கு வாய்ப்பில்லை. தொழில் மற்றும் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். 5ம் இடத்தை பார்வையிடுவதால் சிலருக்கு புத்திர பாக்கியமும், 7ம் இடத்தை பார்வையிடுவதால் திருமணமும், 9ம் இடத்தை பார்வையிடுவதால் ஆன்மிகத்தில் ஈடுபாடும் ஏற்படும். தீமைகளை குறைத்து நண்மைகளை பெற குரு பகவானை வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும்.
   விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, விருச்சிக ராசிக்கு இதுவரை 10ம் இடத்தில் இருந்து தொழிலில் பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தந்த குரு இப்போது உங்கள் ராசிக்கு யோகத்தை அளிக்க கூடிய 11ம் இடமான லாப ஸ்தானத்தில் வருகிறார். அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களுக்கு நல்லது நடக்க போகிறது. குரு எந்த ராசிக்கும் 11ம் இடத்திற்கு வந்தால் அது யோகம் தான். அதிலும் விருச்சிக ராசிக்கு அதிக நன்மைகள் செய்யும் கிரகமான குரு இப்பொழுது 11ம் இடத்திற்கு வருவதால் இரட்டிப்பு பலனை தருவார். இப்போது நீங்கள் எந்த முயற்சியில் இறங்கினாலும் அது வெற்றி தரும். லாப ஸ்தானத்திற்கு குரு வரும்போது எல்லா நன்மைகளையும் எதிர்பார்க்க முடியும். குரு உங்களுக்கு 2, 5க்கு உடையவர். குரு லாப ஸ்தானத்தில் அமர்வது மிகவும் நல்லது. லாபகரமான தொழில் அமையும். தொழில் மென்மேலும் விருத்தி அடையும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். பணக்கஷ்டம் வராது. வீடு வாகனம் ஆகிய வசதி ஏற்படும். பல விதத்திலும் வருமானம் கிடைக்கும். குரு 3, 5, 7ம் இடங்களை பார்க்கிறார், இதனால் சகோதர வகையில் நன்மையையும் பூர்வ புண்ணிய பலமும் களத்திர வகையில் நன்மையையும் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிடைக்கும். மனைவி வழியில் எதிர்பாராத பண வரவு ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் காதல் வயப்பட்டு வெற்றிபெறுவார்கள். சிலரின் காதல் திருமணத்தில் முடியும். சொந்த தொழில் வளர்ச்சி அமோகமாக உள்ளதால் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததே.
   தனுசு
தனுசு ராசி அன்பர்களே, தனுசு ராசிக்கு இது வரை 9ம் இடத்தில இருந்து கலப்படமான பலன்களை தந்த குரு பகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். 10ல் குரு பதவியை கொடுப்பர் என்று சொல்ல வேண்டும். இருப்பினும் தனுசு ராசிக்கு குரு பகவான் ராசிக்கு அதிபதி ஆவதால் எங்கு இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். ராசிக்கு அதிபதி 10ம் இடத்தில இருப்பதால் உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். செல்வங்கள் சேர்த்து தான தர்மங்கள் செய்யும் மன நிலை உருவாகும். பலரது பாராட்டுகளை கிடைக்க பெறுவீர்கள். குரு பகவான் தனது 5, 7, 9ம் பார்வையாக தனுசு ராசிக்கு 2, 4, 6ம் இடங்களை பார்ப்பதால் அந்த இடங்களுக்கான பலன்கள் மேன்மையடையும். 2ம் இடமானது பொருளாதாரத்தையும் குடும்ப வாழ்க்கையும் குறிக்கும் இடமாகும். தனஸ்தானம், வாக்குஸ்தானம், குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் இடத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறப்புகளுடன் இருந்த கருத்து வேற்றுமைகள் முற்றிலுமாக மறையும். பண வரவு தாராளமாக இருக்கும். 4ம் இடத்தை குரு பார்ப்பதால் புதிய வீடு வாங்கும் யோகம் ஏற்படும். வண்டி வாகன யோகம் மிக சிறப்பாக உள்ளது. 6ம் இடமாகிய ரிஷபத்தை பார்ப்பதால் எதிரி தொல்லை இருக்காது. அலுவலகத்தில் இது வரை இருந்த பிரச்சனைகள் காணாமல் போகும். 10ம் இடம் காரியஸ்தானம், அங்கு குரு இருப்பதால் சுப காரியங்களை செய்வீர்கள். தான தரும காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆலய திருப்பணிகள் செய்யும் பாக்கியம் கிட்டும். 10ல் குரு வரும்போது தொழில் வளர்ச்சி போன்ற நல்ல விஷயங்கள் நடைபெறும். 4ம் இடமாகிய சுகஸ்தானத்தையும் 6ம் இடமாகிய ரோக, சத்ரு ஸ்தானத்தையும் குரு பார்வை படுவதால் ஆரோக்கியத்தில் இருக்கும் அணைத்து குறைபாடுகளும் நீங்கிவிடும்.
   மகரம்
மகர ராசி அன்பர்களே, மகர ராசிக்கு இது வரை 8ம் இடமான சிம்மத்தில் இருந்து கொண்டு பல வகையிலும் தடைகளை ஏற்படுத்தி கொண்டு இருந்த குரு பகவான் இப்போது 9ம் இடமான கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். உங்களுக்கு நன்மை செய்யாத கிரகமாக குரு இருந்தாலும், அதன் பார்வை நிச்சயமாக நன்மைகளை மட்டுமே செய்யும். குரு பெயர்ச்சியின் மூலமாக உங்கள் ராசிக்கு குரு பார்வை கிடைக்கிறது. குரு தான் நின்ற வீட்டைவிட்டு தான் பார்க்கும் வீடுகளுக்கே அதிக நன்மை செய்யும். உங்களுக்கு 3, 12க்கு உடைய குரு 9ல் வருகிறார். 3ம் அதிபதி என்ற வகையில் 9ல் இருக்கும்போது தெய்வ பக்தி, பூர்வ புண்ணிய பலத்தால் சகல சுகமும், உடன் பிறப்புகள் ஆதரவும், நெருங்கிய உறவினர்களின் உதவியும், தூர தேச பயணங்களும் அதன் மூலம் ஆதாயங்களும் ஏற்படும். திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தந்தையின் அன்பும் ஆதரவும் கிட்டும் அதே போல 12க்கு உடையவர் 9ல் இருப்பதால் நல்ல சம்பாத்தியம் ஏற்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் கிடைக்கும். கௌரவமும் அந்தஸ்தும் வரும். பொதுவாக 9ல் குரு நல்லது செய்வார். 9ல் இருக்கும் குருவால் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடும், குல தெய்வ வழிபாடும் பலனை முழுவதுமாக தரும். தெய்வ காரியங்களுக்காக பணம் நிறைய செலவு செய்ய வேண்டியது வரும். உங்கள் காரியங்கள் எதுவானாலும் அனைத்தும் வெற்றி பெரும். எதிர்பாராத திடீர் யோகம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். பெற்றோர்களின் உடல் நலன் சீராக இருக்கும். இது வரை குழப்பத்தில் தவித்துக்கொண்டு இருந்த நீங்கள் குரு அருளால் எதையும் துணிந்து செய்ய முற்படுவீர்கள். குரு மாறுதல் உங்கள் ராசிக்கு சிறப்பான பலனை தரும். எப்படி பார்த்தாலும் இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையில் முன்னேற நல்ல வாய்ப்பினை தரும்.
   கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, கும்ப ராசிக்கு இதுவரை 7ம் இடத்தில இருந்து ராசியை பார்த்து கலப்படமான பலன்களை தந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு 10ம் இடமான கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். 8ல் குரு இருக்கப்போவதால் மிக பெரிய நன்மைகளும் இல்லை தீமைகளும் இல்லை. கும்ப ராசிக்கு குரு நன்மை செய்யாத கிரகம் என்பதால் 8ம் இடத்தில் அது மறைவு பெறுவதை கண்டு பயப்பட தேவையில்லை. 8ல் குரு வருவது சற்று சிரமமான நேரம் தான். இந்த குரு பெயர்ச்சியை பொறுத்த வரை கும்ப ராசிக்காரர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட மாட்டார்கள். குரு உங்கள் ராசிக்கு 12, 2, 4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இதன் பயனாக சில நன்மைகள் ஏற்படும். 2ம் இடத்தையும் 12ம் இடத்தையும் குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். குரு தனது சொந்த வீட்டையே பார்ப்பதால் தனஸ்தானம் வலுப்பெறுகிறது செல்வ செழிப்பு அபாரமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சர்ச்சைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதின் மூலம் சிலருக்கு கணிசமான தொகை கைக்கு வரும். 4ம் இடத்தை குரு பார்ப்பதால் வசதியான வீட்டிற்கு குடிபெயர்வீர்கள். சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும். மனைவி வழியில் சொத்துக்கள் கிடைக்கும். அயல்நாட்டு பயணங்கள் மேற்கொள்ளவும் அதற்க்கான வாய்ப்புகளும் உருவாகும். அடிக்கடி பயணங்களால் நன்மையையும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும், தாய் வழி உறவுகளின் உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது. 8ம் இடது குருவால் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும் ராசி அதிபதி சனியின் தயவால் பெரிய பிரச்சனை ஏதும் வர வாய்ப்பில்லை.
   மீனம்
மீன ராசி அன்பர்களே, மீன ராசிக்கு 6ம் இடமான சிம்மத்தில் இருந்து பணக்கஷ்டம், கடன் வாங்குதல், மருத்துவ செலவுகள், எதிரிகள் என்று சகல விதத்திலும் பாதிப்பான பலன்களே கிடைத்து இருக்கும். இப்போது குரு உங்கள் ராசிக்கு 7ம் இடமான கன்னி ராசிக்கு இடம் பெயர்ச்சியாகிறார். குரு உங்கள் ராசிக்கு அதிபதியாகவும் 10ம் இடது தொழில் ஸ்தானாதிபதியாகவும் இருந்துகொண்டு 7ம் இடத்திற்கு வருவது மிகவும் அதிர்ஷ்டமான காலம் என்றே சொல்ல வேண்டும். 10க்கு உடைய குரு 7ல் சஞ்சரிக்கும் போது நல்ல குணமும் தர்மம் சிந்தனையும் இருக்கும். காரியத்தை சாதிக்கும் துணிவு இருக்கும். வெளிநாடு சென்று வாரும் வாய்ப்பும் கிடைக்கும். உத்தியோகம் / தொழில் நல்ல முறையில் அமையும். மனைவி வழியில் ஆதாயம் கிடைக்கும். திருமணத்திற்கு பின் வசதியான வாழ்க்கை அமையும். குரு பகவான் தனது 5, 7, 9வது பார்வையாக மீன ராசியின் 1, 3, 11ம் இடங்களை பார்க்கிறார். குரு பார்க்கப்படும் மூன்று ராசிகளில் ஒன்று உங்களுடையது என்பதே உங்களுக்கு ஒரு பலம் தான். எந்த ராசிக்கு குரு பார்வை இருக்கிறதோ , அந்த ராசிக்கு பிற கிரகங்களால் எந்த தீமையும் ஏற்படாது. தன் சொந்த வீடான மீனத்தை குரு பார்த்து கொண்டுஇருப்பதால் நிச்சயமாக உங்களுக்கு அதிக அளவில் நன்மைகள் நடைபெறும். உடலும் உள்ளமும் வலுப்பெறும். உடன் பிறந்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு அமையும். வசதி வாய்ப்புகள் பெருகும். தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கலாம். பண வரவு தாராளமாக இருக்கும. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்க போகிறது இந்த குரு பெயர்ச்சி.

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் A .வினோத் குமார். M.A . M .B .A . D.A . செல் : +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 




Donate | Contact | Privacy Policy | SimpleIndia.com | Copyright 2016 TamilDailyCalendar.com


0Y-12 / T-4