Guru Peyarchi Palan - குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi Palan
குரு பெயர்ச்சி பலன்கள்
(குரு பெயர்ச்சி பலன்கள் 2021 - 2022)

ஆண்டுக்கு ஒரு முறை நிகழக்கூடிய குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி பிலவ வருடம் ஐப்பசி மாதம் 27ம் தேதி சனிக்கிழமை அமிர்த யோகமும் சுக்கிலபட்சத்து தசமி திதியில் மதியம் 2.48 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் நேர்கதியில் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.

குரு பகவான் திருக்கணித பஞ்சாங்க கணிப்பின்படி பிலவ வருடம் கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை அன்று (20.11.2021) அமிர்த யோகமும் பிரதமை திதியில் இரவு 11.31 மணி அளவில் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.

இந்த முறை நடக்கும் குரு பெயர்ச்சியே முழுமையான குருபெயர்ச்சியாகும். ,மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி 146 நாட்கள் சஞ்சாரம் செய்கின்றார். இந்த குரு பெயர்ச்சியில் குரு ஒரு ராசியில் ஒரு வருடம் நின்ற பலனை செய்வார். இது போன்ற நிகழ்வுகள் பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும்.

9 கோள்களில் சுபகோளாக, வியாழன், குரு, பொன்னவன், தேவ குரு, தனகாரகன், புத்திகாரகன் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் குரு பகவான், ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது குடும்பம் நல்ல முறையில் இருக்கும்.

குரு பார்க்க கோடி நன்மை என்றும், கோடி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது. குரு பெயர்ச்சியினால் நன்மைகள் நடக்கும் என்று பொதுவாக நம்பலாம், எதிர்பார்க்கலாம்.

உங்கள் ஜெனன ஜாகத்தில் அமைந்துள்ள கரங்களின் அமைப்பையும் தற்பொழுது உங்களுக்கு நடைபெற்று வரும் தசா புத்தியை வைத்தும், கோச்சார ரீதியாக சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் போன்ற மற்ற கிரங்களின் சஞ்சார நிலையை வைத்தும் பலன்கள் மாறிட வாய்ப்புண்டு.

மாதந்தோறும் கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டிருக்கும். கிரகங்களின் இடமாற்றத்திலேயே மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது குரு பெயர்ச்சியாகும். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு 13 மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஆகும். இப்படி ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம்.ஜோதிடத்தில் குரு பகவானை அதிர்ஷ்ட கிரகம் என்று கூறுவார்கள். ஏனெனில் இவர் நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம், நல்ல நட்புகள், நிறைவான செல்வம் ஆகியவற்றை முழுமையாகத் தரக்கூடியவர். இப்படிப்பட்ட குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார். அதற்கு இடையே சிறிது நாட்கள் அதிசாரமாகவும், பின் வக்ர நிலையில் மாறி பழைய நிலைக்கு திரும்புவார்.

நன்மை: மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம், மீனம்

எச்சரிக்கை: ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம்

குரு பரிகாரம்:
ஒவ்வொரு ராசிக்காரரும் வியாழக்கிழமைகளில், தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரக குருவையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு நலம் பெறலாம்.
பரிகாரங்களை வழிபாடு மூலமாகவும், தர்மத்தின் மூலமாகவும் செய்யவதே நல்லது குறிப்பாக வசதியற்ற கோவிலுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவிசெய்வதும் தான் மிக சிறந்த வழிபாடாகும் இதன் மூலமாக நவக்கிரகங்களின் தாக்கம் குறைந்து வரும் ஆண்டு சிறப்பாக அமையும் என நம்பிக்கை கொள்வோமாக.
கடன்வாங்கியோ அல்லது வருவாய்க்கு ஒவ்வாத வகையில் பரிகாரம் செய்யவேண்டாம்.

பெரும்பாலும் தமிழக கோவில்களில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி எல்லாம் வாக்கிய பஞ்சாங்கப்படி தான் நடக்கிறது.

குரு பகவானுக்கு முக்கிய தலமாக கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி பிரசித்தியாக கருதப்படுகிறது.


2021 குரு பெயர்ச்சி பலன்களை கணித்து எழுதிவர்
ஆலந்தூர் A .வினோத் குமார், Ph.d (Astrology), அலைபேசி : 9003019831


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

  
 
Tamil Daily Calendar 2021 | Tamil Monthly Calendar 2021 | Tamil Calendar 2021 | Tamil Muhurtham Dates 2021 | Tamil Wedding Dates 2021 |
Tamil Festivals 2021 | Nalla Neram 2021 | Amavasai 2021 | Pournami 2021 | Karthigai 2021 | Pradosham 2021 | Ashtami 2021 | Navami 2021 | Karinal 2021 | Daily Rasi Palan |
 
Tamil Daily Calendar 2020 | Tamil Monthly Calendar 2020 | Tamil Calendar 2020 | Tamil Muhurtham Dates 2020 | Tamil Wedding Dates 2020 |
Tamil Festivals 2020 | Nalla Neram 2020 | Amavasai 2020 | Pournami 2020 | Karthigai 2020 | Pradosham 2020 | Ashtami 2020 | Navami 2020 | Karinal 2020 | Daily Rasi Palan |