மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மனதில் துணிச்சலும், தன்மைபிக்கையும் பிறக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட அதிகமாகப் பாடுபடவேண்டியிருக்கும். குடும்பத்தில் பல சவால்களை சந்திக்க வேண்டிவரும். எந்த ஒரு பிரச்சனையையும் சர்வ சாதாரணமாக எதிர்கொள்ள முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். வீடு வாகனம் வாங்குவது, விற்பது முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் தாமதங்கள் இருந்தாலும் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சிற்கு நல்ல மரியாதை இருக்கும். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்பது நன்மையை தரும். நீண்ட நாட்களாக தடைப்பட்டுக் கொண்டு இருந்த காரியம் கைகூடும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் ஒரு சில தடைகளுக்கு வெற்றி பெரும். கடன் பிரச்னைகளும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பிரியமானவர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இரவு நேரங்களில் பயணிக்க போது கவனம் தேவை. உடல் உபாதைகள் நீங்கும். வெளிநாடு தொடர்புடைய விஷயங்கள் சாதகமாக முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புது தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 23,24,25,26 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com