Ragu Kethu Peyarchi Palan - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Ragu Kethu Peyarchi Palan
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (2019 - 2020)

ஒரு ராசி கட்டத்தில் அதிக நாட்கள் இருக்கும் குரு, சனி, ராகு-கேது போன்ற பெயர்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்துப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது ராகு-கேது பெயர்ச்சி மிக முக்கிய பெயர்ச்சியாகும். ராகுவும்-கேதுவும் நேர் எதிர் எதிரே நின்று சுழலக்கூடியவை. அவை இரண்டும் ஒரே நாளில் தான் இடம் பெயருவார்கள். 13.02.2019 அன்று பகல் 2.02 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அன்று ராகு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் மாறுகிறார்கள். இவர்கள் 31-08-2020 வரை இதே இடத்தில் இருப்பார்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுவாக ஜோதிட விதி படி ராகு - கேது 3,6,11 இடத்தில் இருந்தால் நல்ல பலன்களை தருவார். மற்ற இடத்தில் இருந்தால் இருக்கும் இடத்தை பொருத்தும், ராகு-கேது பலத்தை பொருத்தும் நன்மை, தீமையான பலன்களை செய்வார் என்பது ஜோதிட விதி. கோச்சார அடிப்படையில் பலன் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் வைத்து பலன் பார்க்கக்கூடாது. அதன்படி, முக்கிய கிரகங்களான சனி, ராகு, கேது ஆகியவையின் இருப்பிடத்தைக்கொண்டும் ஆராய்ந்து இங்கே பலன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ராகு கேது பெயர்ச்சியால் ராகுவினால் நன்மை அடையும் ராசிகள் மேஷம், மகரம், சிம்மம், கேதுவால் நன்மை அடையும் ராசிகள் கடகம், துலாம், கும்பம். இந்த 6 ராசிகள் ராகு கேதுவால் நன்மை அடையும் ராசிகள். மற்ற ராசிகள் சுமாரான பலன்கள் தரும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ளது கோச்சார பலன்களே. இதில் அவரவர் ஜாதத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாக இருக்கும் பட்சத்தில் பலன்கள் மாறலாம். ஆகையால் சரியான பரிகாரம் மூலம் ராகு கேதுவால் வரும் பிரச்சனைகளை குறைத்து வாழ்வில் முன்னேற்றம் அடையாளம்.


ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், Ph.d (Astrology), அலைபேசி : 9003019831


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

 



 




 
Tamil Daily Calendar 2019 | Tamil Monthly Calendar 2019 | Tamil Calendar 2019 | Tamil Muhurtham Dates 2019 | Tamil Wedding Dates 2019 |
Tamil Festivals 2019 | Nalla Neram 2019 | Amavasai 2019 | Pournami 2019 | Karthigai 2019 | Pradosham 2019 | Ashtami 2019 | Navami 2019 | Karinal 2019 | Daily Rasi Palan |
 
Tamil Daily Calendar 2018 | Tamil Monthly Calendar 2018 | Tamil Calendar 2018 | Tamil Muhurtham Dates 2018 | Tamil Wedding Dates 2018 |
Tamil Festivals 2018 | Nalla Neram 2018 | Amavasai 2018 | Pournami 2018 | Karthigai 2018 | Pradosham 2018 | Ashtami 2018 | Navami 2018 |