Sani Peyarchi Palan - சனி பெயர்ச்சி பலன்கள்

Sani Peyarchi Palan
   MESHAM

மேஷ ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சென்று ஆட்சி பலம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10ல் அமரும் சனி தன் 3ம் பார்வையால் 12ம் இடமான அயன, சயன, விரைய ஸ்தானத்தையும், 4ம் இடமான சுக ஸ்தானத்தையும், 10ம் பார்வையாக 7ம் இடமான களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மை கிடைக்க போகிறது. இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்த சனி பெயர்ச்சியின் முதல் ஒரு வருட காலம் மற்ற கிரக நிலைகளும் சாதகமாக உள்ளது. மனதில் நினைத்திருந்த இலட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக நடந்தாலும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மனதில் இருந்த சஞ்சலங்களும், விரக்தியும் நீங்கும். இது வரை தொடர்ந்து வந்த பிரச்னைகள் நீங்கும். புதிதாக வீடு, மனை வாங்க முடியும். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நீங்கள் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். சமுதாயத்தில் புதிய அந்தஸ்தைப் பெற முடியும். குடும்ப வருமானம் உயரத் தொடங்கும். உங்களின் வங்கி கணக்கும் வெகுவாக உயரும். வெளியில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போகவும். உங்களது பல நல்ல செயல்களால் அனைவரது பாராட்டும் கிடைக்கும். இழந்த பொருள், செல்வாக்கை மீண்டும் பெற முடியும். குடும்ப பெரியோர்களின் ஆசியும், தெய்வ தரிசனமும் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பான முறையில் இருக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உங்களுக்குத் தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் கூட ஆச்சரியப்படும் விதத்தில் வளர்ச்சி இருக்கும். உங்கள் செயல்களில் சிறு சிறு இடையூறுகள் வந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவது உறுதி. எதிர்பார்த்த வருமானம் கிடைத்தாலும் அதற்காக அதிகமாக உழைக்க வேண்டி வரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களிடம் விரோதமாக இருந்த உறவினர்கள் கூட இப்போது அன்பு பாராட்டுவர். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். ஆலய வழிபாடு, மன அமைதியை தரும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பெற்றோர்களை அனுசரித்து அவர்ககளின் நலனில் அக்கறைகொள்ளவும். எதிலும் சிந்தித்து உங்கள் செயல்களைத் திறம்படச் செய்து முடிக்கும் காலகட்டமாக இது இருக்கும்.

உத்யோகத்தில் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக செய்ய முடியும். உத்யோகத்தில் வருமானம் கணிசமாக உயரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் உண்டாகும். சக ஊழியர்களை அனுசரித்து போகவும். உத்யோகத்தில் புது தெம்பும், உற்சாகமும் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்தொழிலில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக இந்த சனி பெயர்ச்சி மேஷ ராசிக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கு வழி வகை செய்து கொடுக்கும் என்பது உறுதி.

பரிகாரம் : சனிக்கிழமையில் சிவ வழிபாடு நல்ல பலனை தரும்.

( For Mesham : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Mesham (Aries) [Stars : Ashwini 1,2,3,4 Barani 1,2,3,4 Kirthigai 1 quarters]

Mesham is the first and raising rasi house among the twelve rasis in the vedic horoscope chart. People who are born in the mesha rasi always think higher, broad minded and have speedy approach in all the aspects. Spontaneity, action-orientation, courageousness, driving ability, innovation & open minded are the best qualities. They are able to take up higher positions in business, job, social services, politics and other related activities. Though these mesha rasi people are bit aggressive, they are kind and very helpful to others whoever believes and approaches them. Basically fear to god and fight for the best are naturally cultivated in their mind. Then and there if any show stoppers in life, easily they could cross the barrier with will power. Always sun shines for mesha rasi as the owner of rasi is Mars and heats up everything for continuous improvement.

They get excellent opportunities from the community, political and the government if they intend to serve better. Some people may reach higher levels in education to be honoured like doctorate or scientist. Most of the time, no one can influence these people with any trick as they are able to find and crackdown anything with intuition power. Many under this sign would like to travel for goals or to reach target. Naturally brave hearted people. Also if Mars with Saturn are strong sometimes they become doctors. Many are sports personalities. Always maintains neat and clean policy in everything. May live around 85 to 90 years if maintains good health. These people are usually vigorous and possess a strong constitution and also have incredible powers of speedy recovery. Looks straight forward and open minded; sometimes become world famous. Lucky colours are red and white, stones are ruby and diamond, and numbers are 6 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

 



 




 
Tamil Daily Calendar 2021 | Tamil Monthly Calendar 2021 | Tamil Calendar 2021 | Tamil Muhurtham Dates 2021 | Tamil Wedding Dates 2021 |
Tamil Festivals 2021 | Nalla Neram 2021 | Amavasai 2021 | Pournami 2021 | Karthigai 2021 | Pradosham 2021 | Ashtami 2021 | Navami 2021 | Karinal 2021 | Daily Rasi Palan |
 
Tamil Daily Calendar 2020 | Tamil Monthly Calendar 2020 | Tamil Calendar 2020 | Tamil Muhurtham Dates 2020 | Tamil Wedding Dates 2020 |
Tamil Festivals 2020 | Nalla Neram 2020 | Amavasai 2020 | Pournami 2020 | Karthigai 2020 | Pradosham 2020 | Ashtami 2020 | Navami 2020 | Karinal 2020 | Daily Rasi Palan |