கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சந்தோஷம் அளிக்கும் நிகழ்வுகள் நடக்கும். தன வரவும், புதிய பொருள் சேர்க்கையும் இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் பல்வேறு வழிகளில் உதவுவர். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி தள்ளி போகலாம். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பெற்றோர்களின் உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. புது வீடு, மனை வாங்குவது தொடர்பான காரியங்கள் சிறப்பாக முடியும். யாரும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உடன்பிறப்பு வழியில் மனக்கசப்புகள் உண்டாகும். எதிர்பாராத வகையில் பொருள் விரயம் ஏற்படும். நண்பர்கள் சில நேரங்களில் உங்களுக்கு எதிராக செயல்படலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : புதன்கிழமை பெருமாளை வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com