மேஷ ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, நிதானமான செயல்பாடுகளால் காரிய வெற்றி உண்டாகும். பண வரவு திருப்தி தரும். வார்த்தைகளை அளந்து பேசவும்.குடும்பத்திலும் பொது இடங்களிலும் அனுசரித்து போவது நல்லது. மனம் யோக தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். முன்பு தடைபட்ட காரியங்களை மீண்டும் தொடர முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் வந்து போகும், வீட்டு செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பர். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : முருகரை வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com