MEENAM Yearly Rasi Palan
2019ல் அடியெடுத்து வைக்கும் மீன ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 9-ம் வீட்டிலும், சனி பகவான் 10-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு பல இன்னல்கள் விலகும் இனிய ஆண்டாக இருக்கும். கடவுளின் பரிபூர்ண அருளை பெற்ற உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வித்யாசமான அணுகுமுறையாலும் சாதுரியமான பேச்சாலும் இந்த ஆண்டு நிறைய சாதிக்க முடியும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிகொள்ள வழி வகை செய்துகொள்ளவும். உங்களுக்குத் தெரியாத விவகாரங்களில் இருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. நண்பர்களுக்காக உதவப்போய் முக்கியமான நபர்களைப் பகைத்துக் கொள்ள நேரிடும். பல வழிகளிலும் பொருள்வரவு இருந்து வரும். அறிமுகமில்லாத புதிய நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகி வருவது நல்லது. அவசரப்பட்டு இறங்கும் செயல்களில் அவப்பெயர் உண்டாகலாம், கவனம் தேவை. குடியிருக்கும் வீட்டினில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். புதிய சொத்துக்கள், புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பொருளாதார வளம் கூடும். நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். நற்காரியங்களை செய்வதன் மூலம் நிறைய நன்மை உண்டு. தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருந்தாலும் சேமிக்க முடியாமல் போகும். சொத்து விவகாரங்களில் விட்டு கொடுத்து போவது நல்லது. சொந்த வீடு வாங்கும் முயற்சி நல்ல பலனை தரும். மற்றவர்கள் உங்களை மதிக்கும் படி நடந்துகொள்ளவும். எப்போதும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க விருப்பம் ஏற்படும். திருமணம் வரம் தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். புது மன தம்பதியர்களுக்கு சீக்கிரத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும். வர வேண்டிய பெரிய தொகை கைக்கு வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பாலிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும், உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை ஆதரித்து பேசுவார். உத்யோகத்தில் உங்கள் அயராத உழைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டிவரும். புதிய தொழில் தொடர்ந்து அனுகூலமான பலன்களை தரும். இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் ஆண்டாக அமையும்.
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு பகவானை மனதார வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2019ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831