 VIRUCHIKAM Yearly Rasi Palan
   
			VIRUCHIKAM Yearly Rasi Palan
            2019ல் அடியெடுத்து வைக்கும் விருச்சிக ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் உங்கள் ராசியிலும், சனி பகவான் 2-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடந்த சில ஆண்டுகளாக ஜென்ம சனியால் பட்ட கஷ்டங்கள் முற்றிலும் நீங்கி விட்டது. இந்த புத்தாண்டு முதல் உங்களுக்கு வந்த தடைகள் எல்லாம் விலக போகிறது. புதிய பாதையில் பயணிக்க தொடங்கவும். மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியத்தை கூட தைரியமாக எடுத்து செய்வீர்கள். அடுத்தவர்களை எளிதில் கவரும் பேச்சு திறமை உங்களிடம் இருக்கும். தற்சமயம் வாக்குச்சனி நடப்பதால் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வதால் நன்மை உண்டாகும். உங்களுடைய சேவை மனப்பான்மையும், தொண்டு உள்ளமும் அதிகமாக வெளிப்பட்டு நற்பெயரை பெற முடியும். அடுத்தவர்கள் நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். சிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவை விட செலவுகள் அதிகளவில் இருக்கும். சொத்துப் பிரச்னைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறவினர்களின் வழியில் அதிக பொருள் விரையம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் இயக்கும்போது அதிக கவனம் தேவை. நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். எதையும் எதிர்கொள்ளும் துணிவையும், தைரியத்தையும் பெற முடியும். பண வரவு அதிகரிக்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளர்வர்களின் தொடர்பு கிட்டும். ஆன்மீக ஆர்வம் கூடும். பல புண்ணிய ஸ்தங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். பயணங்கள் ஓரளவு நன்மையை தரும். கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். திருமண முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். புது வீடு, மனை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீக திருப்பணி போன்ற சுப காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும். எந்த ஒரு விஷத்தை செய்ய நினைத்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது உத்தமம். உத்யோகத்தில் தினசரி பணிகளை விரைவாக முடிக்கவும். உத்யோகத்தில் வேலை பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை திரும்ப பெற முடியும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் தொடர்பாக கடன் உதவி கிடைக்கும். 
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2019ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
            
Astrology Predictions Written By : 
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831