Tamil Rasi Palan Yearly 2018 2017 2016 2015 2014 2013 2012 - 2007

2017 Tamil Rasi Palan Yearly
2017 தமிழ் ஆண்டு ராசி பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

2017 எண் கணிதப்படி எப்படி இருக்கும்?
2017 = 2+0+1+7 = 10 = 1 = 1ஆம் எண் = சூரியன் = 1

ஆக இந்த 2017ஆம் ஆண்டு சூரியனின் ஆதிக்கத்தில் பிறக்கிறது. சூரிய பகவான் நவகோள்களின் முதன்மையானவர் ஆவார். ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியனை மையமாக வைத்து அதனின்று பெறப்படும் சக்திகளே மற்ற கோள்கள் பிரதிபலிக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
2017-ம் ஆண்டு வெகு சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள தேவையில்லை. ஏன் எனில் 2017ஆம் ஆண்டு முழுக்க சூரியனின் ஆதிக்கம் அதிகம் நிறைந்துள்ளது. சூரியனின் ஆதிக்கத்தின்படி நிகழ்வதால், பல புதிய படைப்புகள், நிர்வாகம், ஆளுமை, உயர் பதவியில் உள்ளவர்கள் என பல முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள், பிரகாசிக்கும் ஆண்டாக இருக்கும். மேலும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பெரியோர்களின் அன்பும், அரவணைப்பும் உள்ள ஆண்டாக நிச்சயம் இது இருக்கும் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
புது வருடம் 2017 தொடக்கம் :
துர்முகி வருடம் மார்கழி மாதம் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி, திருவோண நட்சத்திரம், மகர ராசி, அமிர்தயோகம் கூடிய சுப தினத்தில் ஆங்கில வருடம் 2017 பிறக்கிறது.
புது வருடம் பிறக்கும் பொழுது மிக முக்கியமாக ராகு கேதுக்கள் எல்லா கிரங்களும் அடைபட்டுள்ளதால் கால சர்ப்ப தோஷத்தில் இவ்வருடம் பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் முக்கிய கிரகங்களான குரு பகவான் கன்னி ராசியிலும், சனி பகவான் விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார். குரு மற்றும் சனி கிரகத்தினை கருத்தில் கொண்டு ஆங்கில வருட பலன் 2017 எழுதப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு பன்னிரெண்டு (12) ராசிக்கான பலனில் இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொது பலன்களே. அவரவர் ஜாதகத்தில் நடைபெறும் தசாபுத்தியை பொறுத்து நன்மை, தீமையான பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம்.
இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் ஒரு சிலருக்கு ஜாதக ரீதியாக யோக திசை நடைபெறுமானால் வரும் கெடு பலன்கள் மாறி நல்ல பலன்கள் கிடைக்கும். கோட்சரத்தில் குரு, சனி, ராகு-கேது ஆகிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சாரம் செய்து தசா புத்தியும் நல்ல முறையில் நடந்தால் பல யோகமான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொரு ராசி நேயரும் அவரவர் மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும், சித்தர்கள் (அல்லது) மகான்களை முறையாக வணங்கி பரிபூர்ண அருளை பெறுமாறு எல்லாம் வல்ல இறைவனை யாம் ப்ராத்திக்கிறோம்.

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், M.A., M.B.A., D.A., செல் : 9003019831


  
Donate | Contact | Privacy Policy | SimpleIndia.com | Copyright 2018 TamilDailyCalendar.com