Tamil Rasi Palan Yearly 2018 2017 2016 2015 2014 2013 2012 - 2007

2018 Tamil Rasi Palan Yearly
2018 தமிழ் ஆண்டு ராசி பலன்கள்
2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

2018-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள் ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரையிலான 12 மாதங்களுக்கும் அந்தந்த மதங்களுக்குரிய தலைப்பில் மேஷ ராசியினர் முதல் மீனராசியினர் வரை பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் புது வருடம் 2018 தமிழ் ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 17ம் தேதி (01.01.2018) திங்கட்கிழமை வளர்பிறை சதுர்தசி திதி, நாழிகை 12, மிருகசீரிஷம் நட்சத்திரம் நாழிகை 20, சித்தயோகம் நாழிகை 60, கூடிய சுபயோக சுபதினத்தில் தினத்தில் ஆங்கில புத்தாண்டு 2018 பிறக்கிறது.

இந்த வருடம் பிறக்கும்பொழுது குரு பகவான் துலாம் ராசியிலும் சனிபகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார். இந்த முறை குரு பகவான் 7.3.2018 அன்று வக்ர ஆரம்பமாகி 4.7.2018 அன்று வக்ர நிவர்த்தி ஆகிறார். 25.4.2018 முதல் 21.8.2018 வரையில் சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பார். சனிபகவான் மற்றும் குரு பகவான் சஞ்சாரத்தையும் மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தையும் கருத்தில் கொண்டு ஆங்கில வருட பலன் 2018 எழுதப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு பன்னிரெண்டு (12) ராசிக்கான பலனில் இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொது பலன்களே. அவரவர் ஜாதகத்தில் நடைபெறும் தசாபுத்தியை பொறுத்து நன்மை, தீமையான பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம்.

இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் ஒரு சிலருக்கு ஜாதக ரீதியாக யோக திசை நடைபெறுமானால் வரும் கெடு பலன்கள் மாறி நல்ல பலன்கள் கட்டாயம் உண்டாகும். கோட்சரத்தில் குரு மற்றும் சனிபகவான் நல்லமுறையில் சஞ்சாரம் செய்து தசா புத்தியும் நல்ல முறையில் நடந்தால் பல யோகமான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொரு ராசி நேயரும் அவரவர் குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், கிராம தெய்வத்தையும், மற்றும் மகான்களையும் முறையாக வணங்கி பரிபூர்ண அருளை பெறுமாறு எல்லாம் வல்ல இறைவனை யாம் ப்ராத்திக்கிறோம்.

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், M.A., M.B.A., D.A., செல் : 9003019831


  
Donate | Contact | Privacy Policy | SimpleIndia.com | Copyright 2018 TamilDailyCalendar.com