Tamil Rasi Palan Yearly

2020 Tamil Rasi Palan Yearly
2020 தமிழ் ஆண்டு ராசி பலன்கள்
2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

எண் கணிதப்படி 1.1.2020 = 1+1+4 = 6 ஆம் எண்ணில் இந்த ஆண்டு பிறப்பதால் ரிஷிப மற்றும் துலா ராசிக்காரர்களுக்கு, நற்பலன்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

ஜனன ஜாதத்தில் சுக்கிர தசை, சுக்கிர புத்தி நடக்கும் அன்பர்களுக்கும் நற்பலன்கள் அதிகளவில் நடக்கும்.

நிகழும் விகாரி வருடம் மார்கழி மாதம் 16ம் தேதி புதன்கிழமை வளர்பிறையில் மகர லக்னம், சஷ்டி திதி, சதய நட்சத்திரம், கும்ப ராசியில் அதிகாலை மணி 00 நிமிஷம் 01க்கு ஆங்கில புத்தாண்டு 2020 உற்சாகத்துடன் பிறக்கிறது.

2020ம் ஆண்டு பன்னிரெண்டு (12) ராசிகளுக்கான பலன்கள் அனைத்தும் பொது பலன்களே. உங்கள் ஜாதகத்தில் நடைபெறும் தசாபுத்தியை பொருத்து நற்பலன்கள், கெடுபலன்கள் கூடலாம் அல்லது குறையலாம்.

இவைகள் கோச்சார பலன்கள் என்பதால், இதில் ஏதேனும் கஷ்டமான பலன்கள் சொல்லப்பட்டிருந்தால்
அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் ஒரு சிலருக்கு ஜாதக ரீதியாக யோக திசை நடைபெறுமானால் வரும் கெடு பலன்கள் மாறி நல்ல பலன்கள் கிடைக்கும். கோட்சரத்தில் குரு, சனி, ராகு-கேது ஆகிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சாரம் செய்து தசா புத்தியும் நல்ல முறையில் நடந்தால் பல யோகமான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொரு ராசி நேயரும் அவரவர் மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும், சித்தர்கள் (அல்லது) மகான்களை முறையாக வணங்கி பரிபூர்ண அருளை பெறுமாறு எல்லாம் வல்ல இறைவனை யாம் ப்ராத்திக்கிறோம்.

2020 ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் A.வினோத்குமார், செல்: 9003019831

Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.