Tamil Rasi Palan Yearly 2019 2018 2017 2016 2015 2014 2013 - 2007

2018 Tamil Rasi Palan Yearly
   KATAKAM

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் கடக ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்தப் 2018 ஆண்டு, சச்சரவுகள் இல்லாத ஆண்டாக அமையப் போகிறது. நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் தேடி வரப்போகிறது. உடல்நலம் சீராக இருக்கும். மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்கும். குடும்ப கௌரவம் உயரும். தன வரவு உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் பகை மாறும். அடுத்தவருக்கு வெளியில் கைமாற்றாக வாங்கி கொடுத்த பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் அமைப்பு உருவாகும். பழைய வண்டி, வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பப் பெரியோர்களின் ஆலோசனை கிடைக்க பெறுவீர்கள். பொதுவாகவே பொருளாதார நிலை சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாகக் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். நீங்கள் சிந்தனை வளம் மிக்கவர்களாக இருப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். நல்ல குடும்பம் அமையும். உங்கள் பிடிவாதக் குணத்தை கொஞ்சம் தளர்த்தி கொண்டால் வாழ்வில் பெரியளவில் வெற்றி பெறலாம். உற்றார், உறவினர்கள் கூட உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர். தொழிலில் இதுவரை ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உடன் இருப்பவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் வந்து சேரும். பணியில் இருந்த அல்லல்கள் அகலும். இந்த ஆண்டு எதிரிகளின் பலம் குறைவாகவே இருக்கும். அதிக முயற்சி எடுத்தே ஒரு சில காரியங்களை முடிக்க நேரிடும். அதே நேரத்தில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பணி நிரந்தரம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு அது நிரந்தரமாகும். கூட்டாளிகளிடம் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. எந்தத் தொழில் செய்தாலும் உங்கள் மேற்பார்வையிலேயே வைத்துக்கொள்வது நல்லது, அப்பொழுதுதான் லாபத்தைக் கைப்பற்றிக் கொள்ள இயலும். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகலாம், ஆகையால் அவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி கிடைக்கும். பெற்றோர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். வாழ்க்கைத் துணையோடு ஒற்றுமையாக செயல்பட்டால், குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனை முக்கிய சமயத்தில் கிடைக்கும். மற்றவர்களின் துணையோடு, புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்வீர்கள். சுப விரயங்கள் அதிகரிக்கும். பாதியில் நின்றிருந்த கட்டிடப் பணி தொடரும். வெளிநாட்டு தொடர்பு அனுகூலம் தரும். விலகிச் சென்றவர்கள், மீண்டும் உங்களை நாடி வருவர். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். சந்தர்ப்பங்களைச் சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். முக்கிய காரியங்களில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உங்கள் செல்வாக்கு நிலை உயரும். வெளிநாட்டுப் பயணம் எண்ணியபடி வாய்க்கும். வாழ்க்கைத் துணையோடு சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும்.
தெய்வ வழிபாட்டில் முழுமையாக கவனம் செலுத்தினால் வரும் துயரங்கள் ஓரளவாவது குறையும். எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த வழி. பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் வராகியை வணங்கி வழிபடவும். முக்கிய குறிப்பு : இந்த 2018-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

( For Katakam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Katagam (Cancer) [Stars: Punarvasu 4 Poosam 1,2,3,4 Aayilyam 1,2,3,4 quarters]

Lucky people and mercy along with! More commanding, politically influenced & social rockers. Do or die matters will be easily tackled by kataga rasi people. Sensitive, emotional, harmonious, dedicated, intuitive, pleasure of living and well wishers. Sun & Moon plays major role in the life with Venus for this rasi. Basically people under kataga rasi love their family and be so dedicated to family oriented matters. Sometimes the performance goes very high like superman with super powers. People set their life in government sectors, police/ military, politics, education, technology, hardware, management & business. Many people be the leaders under this rasi where lakhs of people follow them as a master. Easily balanced in everything and they try to know or have knowledge in all the fields based on their experience and study. Strong divinely kataga rasi people be the best Gurujis in the world. Enemies are excused if they realise mistakes and be friendlier.

There is no missing in action concept for kataga rasi. Performance always reach new highs; in all the areas whatever under progress. More prosperity and abundance by birth or over period of time comes easily. If they write a single topic; become famous author. Basically all rounder quality exists for almost everyone in this rasi. Miraculously these people are neutral for most of the problems because they do not want to loose dignity and fame. General knowledge, experience, self confidence, helping tendency, growth, people management are good qualities of kataga rasi people. Easily adoptable under any difficult situation and overcome any tough situations. With good health the lifespan goes until 90 years. Base for this rasi is raja yogam of ruling by birth as however the planetary position is. Lucky colours are white, blue and red, stones are red coral and ruby, and numbers are 1, 2 & 5.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

  
 
Tamil Daily Calendar 2019 | Tamil Monthly Calendar 2019 | Tamil Calendar 2019 | Tamil Muhurtham Dates 2019 | Tamil Wedding Dates 2019 |
Tamil Festivals 2019 | Nalla Neram 2019 | Amavasai 2019 | Pournami 2019 | Karthigai 2019 | Pradosham 2019 | Ashtami 2019 | Navami 2019 | Karinal 2019 | Daily Rasi Palan |
 
Tamil Daily Calendar 2018 | Tamil Monthly Calendar 2018 | Tamil Calendar 2018 | Tamil Muhurtham Dates 2018 | Tamil Wedding Dates 2018 |
Tamil Festivals 2018 | Nalla Neram 2018 | Amavasai 2018 | Pournami 2018 | Karthigai 2018 | Pradosham 2018 | Ashtami 2018 | Navami 2018 |