KUMBAM Guru Peyarchi Palan
கும்ப ராசி நேயர்களே, (கும்ப ராசிக்கு குரு இரண்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும்.) குரு உங்கள் ராசிக்கு 6ம் இடமான சத்ரு ஸ்தானத்திற்கு செல்கிறார். இது வரை கும்ப ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்த குரு பகவான் 6-ம் இடத்திற்கு செல்கிறார். (6-ம் இடம் மறைவு ஸ்தானம்) 6-ம் இடத்து குரு காரியங்களில் தடங்களை ஏற்படுத்தும். 6-ல் குரு அமருவது சிரமம் என்றாலும் அவரது சிறப்பு பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பொருளாதார நிலையில் பிரச்சனை ஏதுமின்றி தன வரவு என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். சகட குருவால் சின்னச் சின்ன பிரச்சனைகள் மட்டுமே வரும் மற்றபடி பெரியளவில் பாதிப்பு இருக்காது. 6-ம் இடத்து குரு ஆன்மீக பணிகளிலும் ஈடுபட வைப்பார். உங்கள் ராசிக்கு 6ல் குரு மறைகிறார். "சகட குருவாச்சே சங்கடங்களைத் தருவாரே" என்று யோசிக்க வேண்டாம். பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். கடுமையான முயற்சியால் முன்னேறப் பார்க்கவும். மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்தாலும், சில தருணங்களில் ஏமாறவும் வாய்ப்பு உண்டு. எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்தில் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னை வராமல் பார்த்துக்கொள்ளவும். வி.ஐ.பிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். வரிகளைச் செலுத்துவதில் தாமதம் வேண்டாம். நியாய, தர்மங்களை அலசி, ஆராய்ந்து பார்க்கவும். அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் திறன் இருக்கும். சமூகத்தில் உங்களது பேச்சுக்கு மதிப்பு கூடும். பணம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். திருமண வாய்ப்புகள் தாமதப்படும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். எதிர்பாராத பழைய கடன்களால் மனக்கவலை உண்டாகும். புதிய கடனை மேற்கொண்டு வாங்காமல் இருப்பது நல்லது. புதியவர்களை நம்பி முடிவு எடுக்கவேண்டாம். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மறைமுக எதிரிகளின் தொல்லை இருக்கும், இருப்பினும் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்கவும். ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவும். குடும்ப பிரச்சனை தீரும். தூரத்து பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும். வாழ்க்கையில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்ள முடியும். உத்யோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். வேலை இல்லாதவருக்கு சீக்கிரத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும். இந்த குருப் பெயர்ச்சி நிறைய செலவுகளையும், வீண் அலைச்சல்களையும் தந்தாலும் வெற்றி பெறுவது உறுதி.
பரிகாரம் : விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுங்கள். வினைகள் யாவும் நீங்கும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831