SIMMAM Guru Peyarchi Palan
சிம்ம ராசி நேயர்களே, (சிம்ம ராசிக்கு குரு ஐந்தாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியாகும்.) குரு உங்கள் ராசிக்கு 12ம் வீடான விரைய ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். இது வரை 11-ம் வீட்டில் இருந்த குரு பகவான் 26-05-2026 முதல் 12-ம் வீட்டிற்கு செல்கிறார். (12-ம் இடம் மறைவு ஸ்தானம்), 12 ஆம் வீடான விரய ஸ்தானத்தில் குரு பகவான் மறைவதால், வேலைச் சுமையும், அலைச்சலும், செலவுகளும் இருக்கும். வீட்டை சீர் செய்ய வேண்டிவரும். வங்கி கடன் கிடைக்கும். வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தமுடியும். வெளிப்படையான பேச்சைத் தவிர்க்கவும். பழைய கடனை சமாளிக்க முடியாமல் போகலாம். வாகனத்துக்கான ஓட்டுநர் உரிமம், காப்பீட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பிக்க தவற வேண்டாம். சொத்து ஆவணங்கள், பத்திரங்களைத் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். எவருக்காகவும் வாக்குறுதி தர வேண்டாம். பண வரவுக்கு பஞ்சமில்லை அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். குடும்ப நலன் ஒற்றுமை கூடும். முக்கியமான பணிகளின் போது அடுத்தவர்களை நம்பி இருக்காமல் தேவையான ஏற்பாடுகளை நீங்களே செய்து கொள்வது நல்லது. குடும்பத்தினருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஆன்மீக சார்ந்த விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். நீண்டதொரு ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். காதல் விவகாரங்கள் கை கூடுவதில்லை கொஞ்சம் ஒத்திப்போடவும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு செல்ல முடியும். புதிய வண்டி, வாகனம் வாங்க வேண்டிவரும். எதிர்பார்த்த காரியம் தடையின்றி முடியும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களை தவிர்க்கவும். பழைய கடன்களால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உடல் நலம் நல்ல படியாக குணமாகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். வழக்கு வெற்றிகள் சாதகமாகும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பாராத வகையில் பண வரவு வரும். அடிக்கடி பயணம் மேற்கொள்ளுவதால் பண விரையம் ஏற்படும். பால்ய நண்பர்களுடன் சிறிய மனஸ்தாபம் வரும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். உத்யோகத்தில் வேலை பளு கூடும். உத்யோகத்தில் பல புது முயற்சிகளை மேற்கொள்ள முடியும். புதிய தொழில் மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த குரு பெயர்ச்சியில் பலன் மிகவும் குறைவாக கிடைப்பதால் பொறுமையை கடைப்பிடிக்கவும்.
பரிகாரம்: பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் பெருகும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831