Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    KATAKAM Guru Peyarchi Palan

இந்த வருடம் 2024 மே மாதம் 1-ம் தேதி குரு பகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடம் என்கிற லாபத்தில் அமர்ந்து விட்டார். கேட்கவே வேண்டாம். நினைத்தது எல்லாம் கைக்கு வரும். 11-ம் இடம் லாபஸ்தானம். 11-ம் இடம் யோகமான இடம். ராசிக்கு 11ம் வீட்டில் குரு அவர் பல விதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண செய்வார். அவரின் 7 மற்றும் 9ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் பல்வேறு நன்மைகள் பெறலாம். உங்கள் இராசிக்கு 6-ம் இடம் மற்றும் 9-ம் இடத்திற்கு அதிபதி குரு, லாபத்தில் அமர்வதால் பழைய பிரச்சனைகள் தீரும். 3-ம் இடம் 5-ம் இடம் 7-ம் இடத்தை பார்வை செய்வதால் கீர்த்தி ஏற்படும். எதையும் தைரியமாக சமாளித்து வெற்றி பெற செய்யும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், திருமணம் பாக்கியம் தரும். எதிர்பாரா தனயோகத்தையும் கொடுக்கும். மனைவி வர்க்கத்தில் சில பிரச்னை இருந்தாலும் தீர்ந்து போகும். கூட்டு தொழில் அமைய வழி வகுக்கும். முக்கியமாக இதுநாள் வரை தெளிவு இல்லாமல் இருந்த மனம் தெளிவு பெற்று துணிச்சலாக எடுத்த காரியத்தை முடிக்க வைப்பார். 3-ம் இடம் சாதாரனமான இடம் இல்லை. தைரியத்தை கொடுக்கும் இடம். ஆகவே தைரியமாக எதையும் எடுத்து வெற்றி பெறுங்கள். அரசாங்கத்தால் லாபம் உண்டு. லாப குரு லாபத்தை வாரி வழங்கும். (11-ம் இடம் என்பது லாப ஸ்தானம்) 11-ம் இடத்தில் குரு அமர்வது மிகவும் விசேஷமான பலனை தரும். 11-ம் இடம் வெற்றியை குறிக்கும் இடம் என்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். குரு பகவான் 11-ம் இடத்திற்கு வருவது பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் எப்பொழுதுமே சந்தோஷம் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் மங்கள் காரியங்கள் நடைபெறும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அனுகூமுறையால் தீர்வு கிடைக்கும். விலகி நின்ற நண்பர்கள் மீண்டும் வந்து நட்பு பாராட்டுவர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்க முடியும். உடன்பிறந்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவார்கள். உடன்பிறப்புகளுக்கிடையே நல்லுறவு மலரும். உடல் நிலையும், மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். காதல் கைகூடும். காதல் வயப்பட்டவர்களுக்கு காதல் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும். மனைவி வழி சொத்துக்களால் ஆதாயம் உண்டு. திருமணம் ஆகி வெகு நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்கள் கடுமையான முயற்சியால் பல வெற்றிகளையும், சாதனைகளையும் படைக்க முடியும். எதிரிகளின் இடையூறுகளை தைரியமாக எதிர்கொள்ள முடியும். பொருளாதாரம், சமூக அந்தஸ்து உயரும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த குலதெய்வ வழிபாடு, தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சீர் செய்ய முடியும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரைவில் விசா கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். இந்த குரு பெயர்ச்சியில் நல்லது, கெட்டதும் கலந்து நடப்பதால், சுமாரான பலன்களே எதிர்பார்க்கலாம்.
பரிகாரம் : வியாழக்கிழமையில் மஞ்சள் நிற ஆடையை அணிவதால் நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும்

( For Katakam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Katagam (Cancer) [Stars: Punarvasu 4 Poosam 1,2,3,4 Aayilyam 1,2,3,4 quarters]

Lucky people and mercy along with! More commanding, politically influenced & social rockers. Do or die matters will be easily tackled by kataga rasi people. Sensitive, emotional, harmonious, dedicated, intuitive, pleasure of living and well wishers. Sun & Moon plays major role in the life with Venus for this rasi. Basically people under kataga rasi love their family and be so dedicated to family oriented matters. Sometimes the performance goes very high like superman with super powers. People set their life in government sectors, police/ military, politics, education, technology, hardware, management & business. Many people be the leaders under this rasi where lakhs of people follow them as a master. Easily balanced in everything and they try to know or have knowledge in all the fields based on their experience and study. Strong divinely kataga rasi people be the best Gurujis in the world. Enemies are excused if they realise mistakes and be friendlier.

There is no missing in action concept for kataga rasi. Performance always reach new highs; in all the areas whatever under progress. More prosperity and abundance by birth or over period of time comes easily. If they write a single topic; become famous author. Basically all rounder quality exists for almost everyone in this rasi. Miraculously these people are neutral for most of the problems because they do not want to loose dignity and fame. General knowledge, experience, self confidence, helping tendency, growth, people management are good qualities of kataga rasi people. Easily adoptable under any difficult situation and overcome any tough situations. With good health the lifespan goes until 90 years. Base for this rasi is raja yogam of ruling by birth as however the planetary position is. Lucky colours are white, blue and red, stones are red coral and ruby, and numbers are 1, 2 & 5.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.