2025 தமிழ் மாத ராசி பலன்கள் - Tamil Rasi Palan Monthly September 2025 |
செப்டம்பர் மாத ராசி பலன்கள் (2025) விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி முதல் புரட்டாசி மாதம் 14ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி 01-09-2025 முதல் 30-09-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. உங்கள் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி, அந்தரம் மற்றும் கோச்சாரம் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். ஜாதக ரீதியாக யோக திசை நடைபெறுமானால் வரும் கெடு பலன்கள் மாறி நல்ல பலன்கள் கிடைக்கும். செப்டம்பர் மாத கிரக நிலை மாற்றம் 13-09-2025 - துலாம் - செவ்வாய் 15-09-2025 - சிம்ம - சுக்கிரன் 15-09- 2025 - கன்னி - புதன் 17-09-2025 - கன்னி - சூரியன் ராசி பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A. வினோத் குமார், Ph.d Astrology (அலைபேசி: 9003019831) |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com