சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் செயல்கள் மற்றவர்களை கவரும் வண்ணம் இருக்கும். உங்கள் கடமைகளை திறம்பட செய்ய முடியும். பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்க போகிறது. தெய்வ பக்தி அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோசமான சூழல் நிலவும். சிலருக்கு புது வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போகவும். அடிக்கடி பயணங்களால் நிறைய அலைச்சலை சந்திக்க வேண்டிவரும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உங்கள் விருப்பங்களை எதுவானாலும் அதை நிறைவேற்றிக்கொள்ள இயலும். உத்தியோகத்தில் பணிச்சுமையை ஏற்க வேண்டிவரும். தற்போது செய்து வரும் தொழிலில் அபரிதமான வளர்ச்சி காண முடியும்.
சந்திராஷ்டமம் : 22,23,24 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com