மேஷ ராசி நேயர்களே : 26.4.2025 அன்று ராகு பகவான் விரைய ஸ்தான த்திற்கும் - கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால் கூடுதலான அலைச்சல் உண்டாகும் என்றாலும் நல்ல தனலாபம் உண்டு. குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். யோசிக்காமல் செய்யும் முதலீடுகளில் பண நஷ்டத்தினை சந்திக்க நேரிடும். சரியான முறையில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். திருமண காரியம் விரைவில் கைகூடும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பழைய கடன்கள் அடைப்படும். சொந்த வீடு, வாகனம் யோகம் உண்டாகும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். கொடுக்கல், வாங்கல் லாபமளிக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புத்திரர் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும்.
அடிக்கடி தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக உதவி செய்யும் சூழல் உருவாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். ராகுவின் இடமாற்றம் உங்கள் வேகத்தினைக் குறைக்கும். உங்களது அதிரடி நடவடிக்கையை பார்த்து மற்றவர்கள் அசந்து போவர். எதிலும் பொறுமையாக இருப்பதனால் மட்டுமே பல முக்கிய பொறுப்புகளை ஏற்று செயல்பட இயலும்.
வழக்கு விவகாரங்களில் சமாதானமாகப் போவது நல்லது. வேகத்தினைவிட விவேகமே சிறந்தது என்பது அனுபவப் பூர்வமாக உணர முடியும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் உங்கள் கௌரவம் உயரும். எதிலும் பொறுமையுடன் இருந்தால் மட்டுமே நற்பலனை அனுபவிக்க முடியும். 6ம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் எதிரிகளை வெல்வார். தான் அமரும் இடத்தின் வலிமையைக் குறைப்பவர் கேது என்பதால் கடன் பிரச்னைகள் குறையும்.
நீண்ட நாள் உடல் உபாதைகள் நீங்கும். உடல் ஆரோக்யம் பெறும். எவர் ஒருவரையும் சார்ந்திருக்காமல் தனித்து செயல்பட்டு வெற்றி காண இயலும். குடும்பத்தில் ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும்.
உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். சுயமாகத் தொழில் செய்யும் நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
மொத்தத்தில் ராகு பகவான் சற்று அலைச்சலைத் தந்தாலும் கேது அதற்குண்டான நற்பலன்களைத் தந்து உங்கள் வாழ்க்கை நிலையை வெகுவாக உயர்த்துவார்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831