MAKARAM Rasi Palan Weekly
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் உடல் நலமும், மன நலமும் சீராக இருக்கும். புது நபர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகம் இருக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். எந்த ஒரு சிக்கலையும் எளிதாக சமாளிக்க முடியும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். கடன் வாங்கும் சூழல் தற்சமயம் ஏற்படாது. கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.பெற்றோர்கள் வழியில் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் பெரியளவில் பேசப்படும்.
பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com