சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிரியமானவர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும். எந்த ஒரு காரியத்திலும் திட்டமிடல் அவசியம். வெளியில் யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் வரும். எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். உடல் உபாதைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்ப வரவு செலவுகள் அனைத்தும் கட்டுக்குள் அடங்கி இருக்கும். விருப்பமான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com