THULAM Rasi Palan Weekly
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஷயங்கள் காலதாமதமின்றி நடக்கும். மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் உண்டாகும். வரும் எதிர்ப்புகளை தைரியமாக சமாளிக்க முடியும். குடும்ப சூழ்நிலை சாதகமாக அமையும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். வெளிவட்டாரத்தில் நிறைய தொடர்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்னை உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வாகனங்களில் செல்லும்போது பொறுமை அவசியம். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிப்படவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com