Tamil Rasi Palan Yearly

2019 Tamil Rasi Palan Yearly
2019 தமிழ் ஆண்டு ராசி பலன்கள்
2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

2019-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள் ஜனவரி 2019 முதல் டிசம்பர் 2019 வரையிலான 12 மாதங்களுக்கும் அந்தந்த மாதங்களுக்குரிய தலைப்பில் மேஷராசியினர் முதல் மீனராசியினர் வரை பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் புது வருடம் 2019 நிகழும் விளம்பி ஆண்டு, மார்கழி மாதம் 17-ம் தேதி, செவ்வாய்க்கிழமை (1.1.2019) கிருஷ்ண பக்ஷத்து, தசமி திதியும், ஸ்வாதி நட்சத்திரம், சுகர்ம யோகம், சித்தயோக கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று அதிகாலை 00.01க்கு 2019 ஆண்டு பிறக்கின்றது.

இந்த 2019-ம் ஆண்டு குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி உண்டு.

இந்த வருடம் பிறக்கும்பொழுது குரு பகவான் விருச்சிக ராசியிலும் சனிபகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார். குரு பகவான் 13.3.2019 அன்று மாலை 5.39 மணிக்கு (அதிசாரம் அடைந்து) தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த காலத்தில் குரு பகவான் 19.5.2019 முதல் 26.10.2019 வரை வக்கிரம் அடைந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். அவர் அக்டோபர் மாதம் 27-ம் தேதி அன்று பகல் 11.58 மணிக்கு தனுசு ராசிக்கு மாறுகிறார். தற்போது சனிபகவான் தனுசு ராசியில் உள்ளார். தனுசு ராசியில் இருக்கும் சனிபகவான் 26.04.2019 முதல் 13.09.2019 வரை வக்கிரம் அடைகிறார். சனி பகவான் வக்கிரம் அடைந்தாலும் அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் தனுசு ராசிக்கு குள்ளேயே இருக்கிறார். ராகு - கேது பெயர்ச்சி 13.02.2019 அன்று பகல் 2.02 மணிக்கு நடக்கிறது. அன்று ராகு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் மாறுகிறார்கள். சனி, குரு, மற்றும் ராகு-கேது சஞ்சாரத்தையும் மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தையும் கருத்தில் கொண்டு ஆங்கில வருட பலன் 2019 எழுதப்படுகிறது.

2019 புத்தாண்டு ராசி பலன்கள் என்பது பொதுவானது. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை, ஜென்ம நட்சத்திரம், லக்கினம், பிறந்த காலத்தில் உள்ள தசை, தற்சமயம் நடைபெறும் தசை மற்றும் புக்தி, இன்றைய கோசாரம் ஆகியற்றிக்கு தக்கவாறு ஒவ்வொருவருக்கும் ஜாதக பலன்கள் மாறுபடும்.

இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒவ்வொரு ராசி நேயரும் அவரவர் மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும், சித்தர்கள் (அல்லது) மகான்களை முறையாக வணங்கி பரிபூர்ண அருளை பெறுமாறு எல்லாம் வல்ல இறைவனை யாம் ப்ராத்திக்கிறோம்.

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், Ph.d (Astrology)

Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.