2022 தமிழ் ஆண்டு ராசி பலன்கள் |
தமிழ் ஆண்டு ராசி பலன்கள் - January 2022 2022 ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2022-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள் ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான 12 மாதங்களுக்கும் அந்தந்த மாதங்களுக்குரிய தலைப்பில் மேஷராசியினர் முதல் மீனராசியினர் வரை பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் புது வருடம் 2022 நிகழும் பிலவ ஆண்டு, மார்கழி மாதம் 17-ம் தேதி, திரயோதசி திதி, கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சித்த யோகம் கூடிய சுப தினத்தில் ஆங்கில வருடம் 2022 பிறக்கிறது. இந்த 2022-ம் ஆண்டு குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி உண்டு. இந்த வருடம் பிறக்கும்பொழுது குரு பகவான் kumba ராசியிலும் சனிபகவான் magara ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார். தற்போது சனிபகவான் மகர ராசியில் உள்ளார். சனி, குரு, மற்றும் ராகு-கேது சஞ்சாரத்தையும் மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தையும் கருத்தில் கொண்டு ஆங்கில வருட பலன் 2022 எழுதப்படுகிறது. 2022 புத்தாண்டு ராசி பலன்கள் என்பது பொதுவானது. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை, ஜென்ம நட்சத்திரம், லக்கினம், பிறந்த காலத்தில் உள்ள தசை, தற்சமயம் நடைபெறும் தசை மற்றும் புக்தி, இன்றைய கோசாரம் ஆகியற்றிக்கு தக்கவாறு ஒவ்வொருவருக்கும் ஜாதக பலன்கள் மாறுபடும். இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு ராசி நேயரும் அவரவர் மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும், சித்தர்கள் (அல்லது) மகான்களை முறையாக வணங்கி பரிபூர்ண அருளை பெறுமாறு எல்லாம் வல்ல இறைவனை யாம் ப்ராத்திக்கிறோம். ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், Ph.d (Astrology) |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831