கும்ப ராசி நேயர்களே, இந்த 2022ம் வருடம் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிக்கனமாக இருப்பதும், சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படவும். பணம் தொடர்பாக யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். குடும்ப தேவைகள் அதிகமாகும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். இந்த புத்தாண்டு எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருக்கும். மற்றவர்கள் உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்ளும்படி இருக்கும். மனதினில் எதையும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். எங்கே, எப்படி நடந்து கொள்வது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் ஜெயிக்க முடியும். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம், கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம், நிதானம் தேவை. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். கணவன் - மனைவிக்குல நல்ல அனுசரணை இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு வெகுவாக உயரும். குடும்ப செல்வாக்கு உயரத் தொடங்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். வழக்குகளில் சாதகமான நிலை இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நட்பு வட்டாரத்தால் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குறிப்பாக சுப செலவுகள் அதிகளவில் உண்டு. தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். புது வீடு மனை வாங்கும் திட்டம் கைகூடும். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாக தொடங்கும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் உண்டாகும். விலகி சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். ஒரு சிலருக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். குடும்பத்துடன் பயணம் செல்ல விருப்பம் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. ஒரு சிலர் பூர்விக இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல நேரிடும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மனக்குழப்பம் ஏதும் வராமல் இருக்க தினமும் தியானம் செய்யவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தி பெரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : கால பைரவரை வணங்கி வழிபட கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2022ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831