2022ல் அடியெடுத்து வைக்கும் மேஷ ராசி நேயர்களே, இந்த புது வருடத்தில் பல நல்ல விஷயங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். மனதில் உள்ள எண்ணங்களை நல்ல விதமாக செயல்படுத்த முடியும். உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்கவும். நிதி நிலை பிரச்சனைகள் ஓரளவு சீராக இருக்கும். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் காலதாமதமின்றி நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பணம் பல தடைகளுக்கு பின் கைக்கு வரும். புது பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் செய்ய தொடங்கவும். மனதில் இருந்த சோர்வும், குழப்பமும் மறையும், பெற்றோர்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெற்றோர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ளவும். பிரியமானவர்களிடம் அனுசரித்து போகவும். உறவினர்கள் வழியில் ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சி நடைபெறும். சுற்று வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் செலவுகள் அதிகளவில் ஏற்படும். உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள புது வழியை தேடிக்கொள்ளவும். கணவன் மனைவிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். ஆன்மீக பெரியோர்களின் ஆசி கிட்டும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். உணவு கட்டுப்பாடு அவசியம். எதிர்பார்த்த இடத்திலிருந்து இருந்து நல்ல செய்தி வரும். எதிரிகளின் தொல்லை வெகுவாக குறையும். வீடு வாங்கும் எண்ணம் சீக்கிரத்தில் நனவாகும். இழுபறியில் இருந்து வரும் சொத்துப்பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உறவினர்களை கைக்குள் போட்டுக்கொண்டு உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளவும். பெற்றோரின் உடல்நிலையிலும், மனநிலையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பெண்களால் நன்மை வந்து சேரும். உத்யோகத்தில் ஏற்பட்ட தடை நீங்கி சாதகமான நிலை ஏற்ப்படும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. இந்த புத்தாண்டு பல வகையில் நன்மை தரும் வகையில் இருக்கும்.
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் செவ்வாய்கிழமையில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட உங்கள் கஷ்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தீரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2022ல் ஒவ்வொரு மாதமும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831