2019ல் அடியெடுத்து வைக்கும் ரிஷப ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 7-ம் வீட்டிலும், சனி பகவான் 8-ம் சஞ்சரித்துள்ளதால் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். இந்த புத்தாண்டு உங்களுக்கு நிச்சயம் அதிர்ஷ்ட ஆண்டாக அமையும். உங்கள் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்க போகிறது என்பது தான் உண்மை. பணம் வரவு சிறப்பாக இருக்கும். அஷ்டம சனி பிடியில் சிக்கி இருந்தாலும் கவலைப்படத்தேவையில்லை. உங்களுக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் உரிய நேரத்தில் கிடைத்து விடும். தன்னம்பிக்கையோடு செய்யும் காரியம் நிச்சயம் வெற்றி பெரும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வது சிறப்பு. சென்ற ஆண்டு பட்ட கஷ்டத்தை இந்த ஆண்டு சரி படுத்திக்கொள்ள முடியும். மனம் சந்தோஷமாக இருக்க பணம் நிறைய செலவு செய்ய வேண்டிவரும். புதியவர்கள் நண்பர்களாவர். உங்களுக்கு வந்த பல கஷ்டங்கள் கூட பனிப்போல விலகும். மற்றவர்கள் உங்கள் மீது சுமத்தும் பழிச் சொல்லை பொருட்படுத்த வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்த்து ஏற்கெனவே செய்துவரும் பணியில் மட்டும் கூடுதல் கவனத்தைச் செலுத்தவும். அடுத்தவர்களை நம்புவதை விட நீங்களே நேரடியாக செயலில் இறங்குவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ பொறுமையை கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் செலவுகளும் ஒரு சில பிரச்சனைகளும் வரக்கூடும். பொருள் வரவு அதிகமாகும். முன்பு பயணங்களால் ஏற்பட்ட அலைச்சல்கள் இப்போது குறையும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்த வழிபாட்டை உரிய நேரத்தில் செய்ய முடியும். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். திருமணத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். தந்தை வழி உறவுகளால் ஒரு சில சிக்கல்கள் வரக்கூடும். உடல் நலத்தை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. மறைமுக எதிரிகளால் ஒரு சில தொந்தரவு ஏற்படும். நெருங்கிய உறவினர்கள் கூட பகைமை பாராட்டுவர். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு வரும். நீங்கள் திட்டமிடாது செய்யும் காரியங்கள் வெற்றி பெற்று மகிழ்ச்சியை கொடுக்கும். பல நல்ல வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். இனி எல்லாம் நல்ல காலம் தான் என்கின்ற மன உறுதியும், தெளிவும் உங்களுக்கு வந்து விடும். தெய்வ அனுகிரகத்தால் பல பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் கூடுதல் பணியை சேர்த்து பார்க்க வேண்டிவரும். உத்யோகம் தொடர்பாக நிறைய அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். சிறிய முதலீட்டில் புதிய தொழில் ஒன்றை தொடங்கவும். இந்த ஆண்டு பல சோதனைகளை தாண்டி பல சாதனை படைக்கும் ஆண்டாக இருக்கும்.
பரிகாரம் : குல தெய்வ வழிபாடு எல்லா வகையிலும் சிறப்பை தரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2019ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831