| 2026 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் |
|
தமிழ் புத்தாண்டு பலன்கள் (2026-2027) பராபவ ஆண்டு 14.04.2026 செவ்வாய்கிழமை கிருஷ்ண பட்சம், துவாதசி திதி, சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில், நவாம்சத்தில், சிம்ம லக்னம், கும்ப ராசியில், புதன் ஹோரையில், வைதி ருதி நாமயோகம், நாவகம், நாமகரணம், மரணயோகம், நேத்திரம் ஜீவனற்ற பஞ்சபட்சியில், மயில் துயில் கொள்ளும் நேரத்தில், புதன் தசை, ராகு புத்தியில் பிறக்கிறது. 2026-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) மேஷ ராசியில் சந்திரன் 10-ம் இடத்தில் இருக்கும்போது பிறப்பதால், பல ராசிகளுக்கு அதிகாரப் பொறுப்புகள், தொழில் முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். மேஷம், சிம்மம் போன்ற ராசிகளுக்கு சொந்த வீடு, கார் யோகம் மற்றும் வருமான உயர்வு ஏற்படும், அதே நேரத்தில் பிற ராசிகளுக்கு கடின உழைப்பிற்கேற்ற நற்பலன்கள் கிடைக்கும். 2026 தமிழ் புத்தாண்டு (விசுவவசு வருடம்) குரு மற்றும் சனி பெயர்ச்சியால் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடக்கும், இது பலருக்கு, குறிப்பாக மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு புதிய தொடக்கங்களையும் தொழில் வளர்ச்சியையும் தருகிறது. (2026) ஆம் ஆண்டு பன்னிரெண்டு (12) ராசிக்கான பலனில் இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொது பலன்களே. பொதுப்பலன் என்பது சுமார் 50% அளவுக்கு ஒவ்வொருவருக்கும் பொருந்தும். மீதமுள்ள பலன்கள் அவரவர் ஜாதகத்தில் நடைபெறும் தசாபுத்தியை பொறுத்து நன்மை, தீமையான பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம். இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் கவலைப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. பராபவ ஆண்டுப் பலன்களை ராசி வாரியாக ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத்குமார் தொகுத்து அளித்துள்ளார். (ஆலந்தூர் A.வினோத் குமார், (Ph.d Astrology) - செல் : 9003019831 / 9944719963 |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831