DANUSU Yearly Rasi Palan
தனுசு ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் தனுசு ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். கடந்த ஆண்டு நீங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் ஆனால் இந்த ஆண்டு நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சோம்பேறித்தனத்தையும் கவனக்குறைவையும் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் உங்கள் இலக்கை அடைய முடியும். அர்த்தாஷ்டம சனியின் காரணத்தால் இந்த வருடத்தின் நடுப்பகுதி மிகவும் கடினமாக இருக்கும். பயணம் செய்வது அவ்வ்ளவு எளிதாக இருக்காது, அதிர்ஷ்டம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். வாழ்க்கையின் ஒரு பகுதி நன்றாக நடக்கும்போது, மற்றொரு பகுதி மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். இந்த ஆண்டு தங்கள் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். தெய்வ அருள் கிடைக்கும். புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் வீடு தேடி வரும். நிதி நிலையில் முன்னேற்றம். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். 2026 ஒரு முக்கியமான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும், இது எதிர்பாராமல் வரும் பல சவால்களை சந்திக்க வேண்டிவரும். குடும்ப விரிவாக்கம் தொடர்பான சில தாமதங்களைக் கொண்டுவரும், ஆனால் உங்கள் கடின உழைப்பு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வெகுமதிகளையும் தரும். இந்த ஆண்டு ஆரம்பத்தில் சில சவால்கள் இருந்தாலும், உங்களது விடாமுயற்சி மற்றும் திட்டமிடல் மூலம் ஆண்டு இறுதியில் வெற்றி கிடைக்கும்
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831