KANNI Yearly Rasi Palan
கன்னி ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் கன்னி ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த ஆண்டு சில சந்தர்ப்பங்களில் நல்ல பலன்களையும் மற்றும் சிலவற்றில் பலவீனமான பலன்களையும் தரக்கூடும். உங்களுக்கு நிவாரணமும் நிலையான வளர்ச்சியும் கிடைக்கும். நிதி சிக்கல்கள் குறையும், கடன்கள் அடைப்படும். பணத்தை முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம். முக்கியமான சந்தர்ப்பங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். இந்த நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு நம்பிக்கையையும் மன அமைதியையும் தரும். உடல் நலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியமும் சிறிது ஏற்ற இறக்கமாக இருக்கலாம், ஆனால் விரைவில் குணமாகும். ஜூன் மாதத்திற்குப் பிறகு யோகமான காலம், தொட்டது துலங்கும், வேலை மற்றும் திருமணத்தில் முன்னேற்றம், பணப்பை நிரம்பும், மனதில் பயம் நீங்கி கம்பீரம் பிறக்கும். ஜூன் மாதத்திற்குப் பிறகு அற்புதமான பலன்கள் கிடைக்கும், வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் வரும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள், குறிப்பாக இரண்டாம் பாதியில் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் உங்கள் விருப்பப்படி வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில், வியாபாரம் புது உச்சத்தை தொடும். இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக ஆண்டாக அமையும் என்பது தான் உண்மை.
பரிகாரம் : மகாவிஷ்ணுவை வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831