MAKARAM Yearly Rasi Palan
மகரம் ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் மகர ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். 2026 ஆம் ஆண்டு பொதுவாக பார்க்கும் போது நன்றாகவே இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். தெய்வ அனுக்கிரகமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. உங்கள் வருமான ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் சேமிப்பதில் இன்னும் சிரமம் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் தவறான புரிதல்களைத் தவிர்த்தால் நீங்கள் பிரச்சினைகளிலிருந்து விலகி இருக்க முடியும். மார்ச் 26-க்குப் பிறகு நிறைய மாற்றங்கள், தடையில்லா சுப காரியங்கள், புதிய முயற்சிகளில் வெற்றி, செல்வ வளர்ச்சி, பண வரவு ஆகியவை அதிகரிக்கும், ஆரோக்கிய மேம்பாடு, நீங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தவில்லை என்றால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் கவலையை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுகிறது. பெரிய மனிதர்களின் நட்பும் அவர்களால் பல உதவிகளும் கிடைக்கும். 2026 ஆம் ஆண்டில் சனி உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். குடும்பத்தில் சாதகமான சூழல் உருவாகும். உடல் நலப் பிரச்சனைகள் குறையும். மகிழ்ச்சி, சுபிட்சம், சுப நிகழ்ச்சிகள். புது வீடு, மனை வாங்க முடியும். உங்கள் குடும்பம் சமூகத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெறும். ஆண்டின் பெரும்பகுதி உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று சொல்லலாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் அமையும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : சாஸ்தாவை வணங்கி வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831