MEENAM Yearly Rasi Palan
மீனம் ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் மீன ராசி வாசகர்களே, இவ்வாண்டு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். கடந்த ஆண்டு பல சவால்களை கடந்து வர வேண்டியிருக்கும் ஆண்டு தொடக்கத்தில் சில கசப்பான செலவுgalகளைக் கொண்டுவரும். குடும்ப சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பண விவகாரத்தில் ஏமாற வேண்டிவரும். உங்கள் ராசிக்கு ஜென்ம சனியின் தாக்கம் தொடர்ந்து இருக்கும், எனவே கடின உழைப்பு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மேன்மை நிலை உண்டாகும். பண விஷயங்களில் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் காணலாம். ஜென்ம சனியின் தாக்கம் இருப்பதால், உடல் உழைப்பு, ஆரோக்கியம், போன்ற எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்கவும். நிதி நிலையிலும், உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் எதிர்பாராத திடீர் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. எந்தவொரு அசம்பாவிதங்களையும் தவிர்க்க உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், நேர்மையாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பதும் அவசியம். வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் நிலவி வந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி இருக்கும். இந்த ஆண்டு ஒரு புதிய அணுகுமுறையை கையாளுவதன் மூலம் நீண்டகாலமாக முடியாமல் இருந்த காரியங்களை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831