MESHAM Yearly Rasi Palan
மேஷ ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் மேஷ ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த வருடம் ஒரு கலவையான பலன்கள் உள்ளடக்கியதாக இருக்கும். இதில் நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் நன்றாகத் திட்டமிட்டால், இந்த ஆண்டை வெற்றிகரமாக கடந்து போக முடியும். மார்ச் நடுப்பகுதி முதல் ஜூன் 2026 வரை விஷயங்கள் சரியாக நடக்காமல் போகலாம், அதன் பிறகு, விஷயங்கள் எளிதாகிவிடும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள், உடல்நல சவால்கள் மற்றும் வெளிநாட்டு யோகங்கள் நிறைந்ததாக இருக்கும். வருடத்தின் ஆரம்பம் கொஞ்சம் கடினமாக இருக்கலாம், எதிர்பாராத செலவுகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், ஆனால், அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் உள்ளது, விரைவில் பூரண குணமாகும். உங்கள் லட்சியங்கள் நிறைவேறும், நிதி நிலை உயரும், நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும். வருமானம் நன்றாக இருக்கும், இருப்பினும் சேமிக்க முடியாத அளவிற்கு செலவுகள் வரும். குடும்ப வாழ்க்கையில் சில ஏற்ற, தாழ்வுகளைக் காணலாம். திருமண காரியம் விரைவில் கைகூடும். ஆன்மிக பயணங்கள் மற்றும் நெடுதூர பயணங்கள் மேற்கொள்ள முடியும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டால் அது நடக்கும். வீட்டில் புது பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வேலை மாற்றம் என்று முடிவு செய்தால் ஒரு முறைக்கு பல முறை யோசித்த பின் முடிவு எடுக்கவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். இந்த வருடம் அதிர்ஷ்டம் இருந்தாலும், முழு பலனை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம் : முருகரை மனதார வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831