SIMMAM Yearly Rasi Palan
சிம்ம ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் சிம்ம ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த ஆண்டு சற்று குழப்பமானதாக தான் இருக்கும், ஆனால் ஆக்கபூர்வமானதாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் தெளிவான முன்னேற்றங்கள் உண்டு. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிவாரணமும் நிலையான வளர்ச்சியும் கிடைக்கும். நிதி சிக்கல்கள் குறையும், கடன்களை அடைக்க முடியும். புது முதலீடுகளை செய்ய இது ஒரு நல்ல நேரம். முக்கியமான சந்தர்ப்பங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். இந்த நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு நம்பிக்கையையும் மன அமைதியையும் தரும். குடும்ப வாழ்க்கைக்கு இந்த ஆண்டு மிகவும் நல்லதாகவோ அல்லது மிகவும் மோசமாகவோ இல்லை என்று கூறலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டு உங்கள் உடல்நலம் பலவீனமாக இருக்கும். சாதகமானபலன்கள் பல உண்டு. குறிப்பாக நிதி, தொழில் மற்றும் கடனில் இருந்து விடுதலை போன்ற விஷயங்களில் முன்னேற்றம் காணலாம். புதிய வருமான வழிகள் பிறக்கும், பண வரவு இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். மனம் அமைதி பெரும். நீங்கள் வேலையை இழந்திருந்தால், விரைவில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் சீரான முறையில் இருக்கும். இந்த ஆண்டு முழுவதும் அதிவேக முடிவுகளைத் தவிர்த்து உங்கள் காரியங்களில் நிதானமாகச் செயல்படவும்.
பரிகாரம் : சூரிய பகவானை மனதார வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831