THULAM Yearly Rasi Palan
துலாம் ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் துலாம் ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். கடந்த ஆண்டு முதல் இருந்த நீண்டகால துன்பங்கள் மற்றும் பதட்டங்கள் இறுதியாக முடிவுக்கு வரும். பழைய தவறுகளை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சூழ்நிலையையும் மிகச் சிறப்பாக எவ்வாறு கையாள்வது என்பது புரிய வரும். வெளிநாட்டில் குடியேற விரும்பினால், உங்கள் திட்டத்தை செயல்படுத்த இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். உங்கள் அறிவு புதிய வாய்ப்புகளைத் தரும், மேலும் புத்திசாலித்தனமான முடிவுகள் சாதகமான பலன்களைத் தரும். குடும்ப வாழ்க்கையும் சமநிலையில் இருக்கும். நீங்கள் சரியான உணவு முறையை பின்பற்றினால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 2026 ஆம் ஆண்டு முழுவதும் சனி உங்களை தொடர்ந்து பாதுகாப்பார். முக்கிய கிரகப் பெயர்ச்சிகளால் இந்த வருடம் உங்கள் ராசிக்கு பல நல்ல மாற்றங்கள் வரக்கூடும், நம்பிக்கை அளிக்கும், பல நல்ல தொடக்கங்களைக் கொண்டுவரும் ஆண்டாக அமையும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் தாமதமின்றி வந்து சேரும், நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்படும். உத்யோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆதாயங்கள் கிடைக்கும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831