VIRUCHIKAM Yearly Rasi Palan
விருச்சிக ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் விருச்சிக ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். 2026 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சி வாய்ப்புகளையும் லாபங்களையும் உறுதியாக எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிறைந்திருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். புதிய தொடக்கங்கள், மன அமைதி, தைரியத்தால் முன்னேற்றம், உழைப்புக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும், விருப்பங்கள் பூர்த்தியாகும், வாழ்க்கையில் பல திருப்பங்கள் இருக்கும். இது புதிய நம்பிக்கை, வளர்ச்சி நிறைந்த ஆண்டாக அமையும். உங்கள் 5 ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும். உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளிலிருந்து சிறந்த நிவாரணமம் கிடைக்கும். குடும்ப சூழலிலும் நீங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் உணர முடியும். ஆனால் இந்த ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்படும். அந்த நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புதிய தொடக்கத்தையும், மன அமைதியையும், நம்பிக்கையையும் கொண்டு வரும். உங்கள் ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற தக்க சன்மானம் கிடைக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். இந்த ஆண்டு பல புதிய திட்டங்கள் மூலம் நல்ல லாபத்தையும், மதிப்பையும் பெற முடியும்.
பரிகாரம் : சிவபெருமானை வழிபட மன கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831