Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan
குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி பலன்கள் - 2026
(26.05.2026 முதல் 31.10.2026 வரை)

ஆண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் ஸ்ரீ பராபர வருடம் மே மாதம் வைகாசி 12ம் தேதி (26-05-2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 11.08 மணியளவில் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி (02-06-2026) வைகாசி 19 செவ்வாய்க்கிழமை அன்று காலை 2.25 மணியளவில் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

குரு பகவான் இருக்கும் இடத்தை விட அவரது பார்வை படும் இடங்களுக்கு சக்தி அதிகம் என்பார்கள். கல்வி, வேலை, பதவி, திருமணம் ஆகியவை மனம் விரும்பும் வகையில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு குருவின் பார்வையும், அருளும் வேண்டும். அதனால் தான் பலரும் குருப்பெயர்ச்சி எப்போது வரும், அதற்கு பிறகு வாழ்க்கை மாறும் என எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகங்களில் குரு பகவான் என்பவர் மங்களகாரகன் என்றும், சுபகிரகம் என்றும் அழைக்கப்படுபவர். வாழ்க்கையில் சுபிட்சம், மகிழ்ச்சி ஏற்பட வேண்டும், சுப காரியங்கள் தடையின்றி நடப்பதற்கு காரணமானவர் குரு பகவான் தான். இவர் தான் ஞானத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் என்பதால் இவரை புத்தி காரகன் என்றும் அழைக்கின்றனர்.

குரு பெயர்ச்சி பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அதை சாதகமாகிக் கொள்ள பிராத்தனை, பூஜை, பரிகார முறைகளை கடைப்பிடிக்கலாம்.

குரு பெயர்ச்சி பொது பலன். : பொதுவிதிப்படி குரு அவரவர் ராசிக்கு 2,5,7,9,11 ஆகிய இடங்களில் வரும்போது நற்பலனும், ஜென்மம், 4,10-ம் இடங்களில் வரும்போது சமபலனும், 2,6,8,10,12 ஆகிய இடங்களில் வரும்போது துர்பலனும் நடக்கும். ஜனன ஜாதகத்தில் குரு நின்ற இடத்துக்கு கோட்சர குரு எத்தனையாவது இடத்தில் மாறுகிறார் என்பதை பார்த்து பலன் சொல்லுவது சிறப்பு.

குரு பெயர்ச்சி கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கப்படி தான் குரு பெயர்ச்சி நடக்கும்.
அதிர்ஷ்ட ராசிகள்: 2026 குரு பெயர்ச்சியால், மேஷம் (4-ல் குரு), ரிஷபம் (3-ல் குரு), கடகம் (ராசியில் உச்சம்), விருச்சிகம் (9-ல் குரு) ஆகிய ராசிக்காரர்கள் அதிகப்படியான நற்பலன்களை அடைவார்கள்.

குரு பரிகாரம்:
கீழ்கண்ட குரு பகவானுக்குரிய பீஜ மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பூஜை அறையில் அமர்ந்து 28 முறை அல்லது 108 முறை துதித்து வரவேண்டும்.
ஓம் க்ரம் க்ரீம் சஹ் குர்வே நம

1.) வியாழக்கிழமைகள் தோறும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் குரு பகவான விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.

2.) வியாழக்கிழமைகளில் துறவிகளுக்கு மஞ்சள் நிற ஆடைகளை தானமாக அளிக்கலாம்.

3.) வியாழக்கிழமைகள் தோறும் மஞ்சள் நிற ஆடைகளையே அணிந்து கொள்வதாலும் குரு பகவானின் முழுமையான அருள் நமக்கு கிடைக்க வழிவகுக்கும்.

4.) வியாழக்கிழமைகளில் தங்கள் சக்திக்கு இயன்றளவில் அன்னதானம் செய்வது குருபகவானின் நல்லருளை உங்களுக்கு பெற்றுத்தரும்.

மொத்தத்தில் ஒவ்வொரு ராசிக்காரரும் வியாழக்கிழமைகளில், தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவகிரக குருவையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு நலம் பெறலாம்.

குரு பெயர்ச்சி பலன்களை கணித்து எழுதிவர்
ஆலந்தூர் " A .வினோத் குமார், Ph.d (Astrology), அலைபேசி : 9003019831

Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.