MITHUNAM Guru Peyarchi Palanமிதுன ராசி அன்பர்களே, மிதுன ராசிக்கு இதுவரை 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருந்து அதிகப்படியான செலவுகளை தந்து கொண்டு இருந்த குரு பகவான் இப்போது மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறார். ஜென்ம ராசியில் குரு இருப்பது பொதுவாகவே பலம் பொருந்திய அமைப்பாகும். ஜென்ம குரு நல்லது இல்லை. இது நல்ல அனுகூலம் கொடுக்காது. உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் ஓரளவு நன்மை தரும். ஜாதக ரீதியாக நன்றாக இருந்தால் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மை தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இது வரை 12ம் இடத்தில இருந்த குரு மிகுந்த அலைச்சலையும் சேமிக்க முடியாத செலவுகளையும் கொடுத்து இருப்பார். குரு பெயர்ச்சி அதை முழுவதுமாக மாற்றி விடும். ஜென்ம குருவாக இருந்து 5, 7, 9ம் இடங்களை பார்வையிடும் குருவால் கன்னி ராசியின் 5, 7, 9ம் இடங்கள் பலம் பெறுகிறது. 5ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். அவ்விடத்தை குரு பார்ப்பதால் உயர் பதவிகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போகும் சூழ்நிலை உருவாகும். திருமண வயதில் உள்ளோர்க்கு வெகு விரைவில் மணவாழ்க்கை அமையும். 7ம் இடத்தை குரு பார்ப்பதால் திருமணம் கைகூடும். 7ம் இடம் என்பது வாழ்க்கை துணையை மட்டும் சொல்வதல்ல, கூட்டு தொழிலை பற்றி சொல்வதும் 7ம் இடம் தான். கூட்டு தொழிலில் மிக பெரிய வெற்றியை இப்போது பார்க்க முடியும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும் உங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை. வேலைபழுவையும் வீண் அலைச்சலையும் தவிர்ப்பது நல்லது. 9ம் இடத்தை குரு பார்ப்பதின் மூலம் அணைத்து வகையான செல்வங்களையும் அடைய முடியும் என்று இந்த குரு பெயர்ச்சி சொல்கிறது. ஜாதகத்தில் தசா புத்தி சரியில்லை என்றால், நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக யோசித்து தான் செய்ய வேண்டும். பண வரவு திருப்திகரமாக இருக்காது. திருமணம் தாமதப்படும். வேலை உத்தியோகத்தில் தொந்தரவு ஏற்படும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். அடுத்த குரு பெயர்ச்சி வரை நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
( For Mithunam : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831