தனுசு ராசி அன்பர்களே, தனுசு ராசிக்கு 6ம் இடமான சிம்மத்தில் இருந்து பணக்கஷ்டம், கடன் வாங்குதல், மருத்துவ செலவுகள், எதிரிகள் என்று சகல விதத்திலும் பாதிப்பான பலன்களே கிடைத்து இருக்கும். இப்போது குரு உங்கள் ராசிக்கு 7ம் இடமான மிதுன ராசிக்கு இடம் பெயர்ச்சியாகிறார். இந்த ஒரு வருட காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் ஜென்ம ராசி படி 7ம் வீடு பாதகஸ்தானம் ஆகும். 7ம் வீட்டு குரு நன்மை தரும். இது பொதுவான விதி தான். அதே சமயம் உங்களுக்கு பாதகஸ்தானம் என்பதால் கவனம் தேவை. எந்தெந்த விஷயங்கள் கவனம் தேவை என்றால், முக்கியமாக பணம் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. வெளியில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்ப வராது. கடன் அதிகமாக வாங்கினாலும் திரும்ப செலுத்த முடியாது. கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் பணம் சார்ந்த விஷயத்தில் செலவுகளை கண்டிப்பாக குறைக்க வேண்டும். உங்கள் சுய ஜாதகப்படி தசா புத்தி நன்றாக இருந்தால் தப்பிக்க இயலும். திருமணம் ஆகாதவர்களுக்கு சற்று திருமணம் தாமதப்படும், பிறகு திருமணம் கைகூடும். பொருளாதார ரீதியாக தொந்தரவு ஏற்படும். ஏற்கனவே செய்து கொண்டு இருக்கும் வேளையில் கவனம் செலுத்தினாலே போதும். குரு உங்கள் ராசிக்கு அதிபதியாகி இருந்து கொண்டு 7ம் இடத்திற்கு வருவது மிகவும் அதிர்ஷ்டமான காலம் என்றே சொல்ல வேண்டும். 10க்கு உடைய குரு 7ல் சஞ்சரிக்கும் போது நல்ல குணமும் தர்மம் சிந்தனையும் இருக்கும். காரியத்தை சாதிக்கும் துணிவு இருக்கும். வெளிநாடு சென்று வாரும் வாய்ப்பும் கிடைக்கும். உத்தியோகம் / தொழில் நல்ல முறையில் அமையும். மனைவி வழியில் ஆதாயம் கிடைக்கும். திருமணத்திற்கு பின் வசதியான வாழ்க்கை அமையும். குரு பகவான் தனது 5, 7, 9வது பார்வையாக மீன ராசியின் 1, 3, 11ம் இடங்களை பார்க்கிறார். குரு பார்க்கப்படும் மூன்று ராசிகளில் ஒன்று உங்களுடையது என்பதே உங்களுக்கு ஒரு பலம் தான். எந்த ராசிக்கு குரு பார்வை இருக்கிறதோ , அந்த ராசிக்கு பிற கிரகங்களால் எந்த தீமையும் ஏற்படாது. தன் சொந்த வீடான மீனத்தை குரு பார்த்து கொண்டுஇருப்பதால் நிச்சயமாக உங்களுக்கு அதிக அளவில் நன்மைகள் நடைபெறும். உடலும் உள்ளமும் வலுப்பெறும். உடன் பிறந்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு அமையும். வசதி வாய்ப்புகள் பெருகும். தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கலாம். பண வரவு தாராளமாக இருக்கும. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்க போகிறது இந்த குரு பெயர்ச்சி.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831