கடக ராசி அன்பர்களே, இது வரை கடக ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்துவந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடமான மிதுன ராசிக்கு செல்கிறார். பொதுவாக குரு 12ல் இருப்பது பணம் பல வகையில் விரயமாகும். இந்த குரு பெயர்ச்சியானது உங்களுக்கு சுப விரயங்களை கொடுக்கும். சற்று கவனமாக இருந்தால் வீடு வாகனம் பொருள் சேர்த்துக் கொள்ளலாம். செலவுகளை நல்ல விஷயங்களுக்கு மூலதனமாக திட்டமிட்டு செய்யவும். பண வரவு அதிகரிக்கும். அதே சமயம் சுப செலவும் ஏற்படும். சரியான முறையில் திட்டமிட்டு பணத்தை செலவு செய்யவும். திருமணம் ஆகாதவளுக்கு திருமணம் கைகூடும். பணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. வெளியில் பணம் கொடுத்தால் திரும்ப வராது. கடன் அதிகம் வாங்கினால் திரும்ப செலுத்த முடியாது. எனவே இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்கவும். குரு 12ல் இருந்தாலும் தனது 5, 7, 9ம் பார்வையாக கடக ராசிக்கு 4, 6, 8ம் இடங்களை பார்க்கிறார். 4ம் இடம் என்பது வீடு மனை, தாய் வழி உறவினர், வாகன சுகம் ஆகியவற்றை குறிக்கும். அவ்விடத்தை குரு பார்ப்பதால் வீடு வாங்கும் யோகம் உண்டு. குரு 3, 6க்கு உடையவர். தொழிலை பொறுத்தவரை நல்ல யோகம், பெரிய பதவி கிட்டும். சிலருக்கு வெளிநாட்டுக்கு செல்லவும் வாய்ப்பு உண்டாகும். குரு பார்வை 6ம் வீட்டிற்கு கிடைப்பதால் கடன் கட்டுக்குள் இருக்கும். 12ல் வரும் குரு வருமானம் இன்றி செலவுகளை அதிகப்படுத்துவார். சகோதரனிடம் கருத்து வேற்றுமை உண்டாகும். பல விதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும். வீண் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். பணியில் நிம்மதி குறைவாக இருக்கும். குரு உங்களுக்கு 6க்கு உடையவர், 12ல் வந்து யோகத்தை கொடுப்பார், எதிர்பாராத பல நன்மைகள் நடக்கலாம். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் நலம் நன்றாக இருக்கும். மருத்துவ செலவுக்கு வாய்ப்பில்லை. தொழில் மற்றும் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். 5ம் இடத்தை பார்வையிடுவதால் சிலருக்கு புத்திர பாக்கியமும், 7ம் இடத்தை பார்வையிடுவதால் திருமணமும், 9ம் இடத்தை பார்வையிடுவதால் ஆன்மிகத்தில் ஈடுபாடும் ஏற்படும். தீமைகளை குறைத்து நண்மைகளை பெற குரு பகவானை வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும்.
( For Katakam : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831