கும்ப ராசி அன்பர்களே, கும்ப ராசிக்கு இதுவரை 4ல் இருந்த குரு இப்போது 5ம் இடமான மிதுன ராசிக்கு மாறுகிறார். பொதுவாக 2, 5, 7, 9, 11 ஆம் இடங்கள் குருவுக்கு யோகமான இடங்கள். இந்த குரு பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம், யோகம் உங்களுக்கு கிடைக்க போகிறது. பொருளாதாரம் உயரும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை ஏற்படும். வசதி வாய்ப்புகள் அதிகமாகும். நினைத்த விஷயங்கள் நடக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால், இந்த குரு பெயர்ச்சி பலன்களை பரிபூரணமாக நீங்கள் அனுபவிக்க முடியும். திருமணம் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தவர்களுக்கு திருமணம் கைகூட போகிறது. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது. நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் போகிறது. புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல அருமையான காலகட்டம். ஆனால் உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். பூர்வீகம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். தற்காலிகமாக வெளியூர் பயணம் ஏற்படும். உங்களுக்கு சாதகமாகவும் அமையும். செலவுகளை மட்டும் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. கோச்சாரம் நன்றாக இருக்கிறது. அதேபோல் தசா புத்தியும் நன்றாக இருக்கும் பட்சத்தில், சாதகமான சூழல் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2க்கும் 11க்கும் உடைய குரு நன்மை செய்யும் கிரகம் அல்ல என்றாலும் அதன் சுப பார்வை நன்மையை மட்டுமே நிச்சயம் செய்யும். உங்கள் ராசிக்கு 9, 11 ஆகிய மூன்று இடங்களுக்கு பார்வை கிடைப்பதால் மிகப் பெரிய நன்மைகள் நடைபெறும் என்று உறுதியாக சொல்ல முடியும். குரு உங்கள் ராசிக்கு 2க்கு உடையவராக இருப்பதால் அதன் பார்வை மிகப்பெரிய நன்மையை செய்ய போகிறது. உங்கள் ராசியை குரு பார்க்க போவதால் குருவால் ஏராளமான நன்மைகள் கிடைக்க போகிறது. குறிப்பாக ஆரோக்கிய விஷயத்தில் எல்லா குறைபாடுகளும் முழுவதும் நீங்கிவிடும். 11க்கு உடையவர் 8ல் அமர்ந்து தன வீட்டை பார்ப்பது வெகு நன்மை. வளமான குடும்பம் அமையும். புத்திர பாக்கியம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் அன்பும் ஆதரவும் கிட்டும். நல்ல உத்தியோகம் / தொழில் அமையும். புத்திரர்களால் தனம், கெளரவம் ஆகியவை கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்படும். திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் தாமதப்படலாம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலர் காதல் விவகாரங்களில் ஈடுபடக்கூடும். கவனம் தேவை. உடல் நிலை பொருத்தவரை உணவு விஷயங்களில் கவனம் தேவை. எப்படி பார்த்தாலும் குரு பெயர்ச்சி ஏற்றமான பலன்களே தரும்.
( For Kumbam : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831