மகர ராசி அன்பர்களே, மகர ராசிக்கு இதுவரை 5ம் இடத்தில இருந்த குரு இப்போது 6ம் இடமான மிதுன ராசிக்கு மாறுகிறார். ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பொதுவான பலன்களே தருவார். (பொதுவாக 3, 6, 8, 12 ம் இடங்கள் குருவுக்கு துர்பலன்களை தரக்கூடிய இடங்கள் ஆகும்.) பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் பெரிய ஏற்றம் இருக்காது. எதிர்பார்த்த மதிப்பு மரியாதை குறையும்.
வீட்டில் சுப நிகழ்வு தாமதப்படும். புதிதாக எந்த விஷயத்தையும் ஆரம்பிக்க முடியாது. மிதுனத்தில் குரு பகவான் இருக்கும் வரை, நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் தாமதப்படும். வெற்றி வாய்ப்புகள் தாமதப்படும். புதிய திட்டங்களை ஒத்தி போட வேண்டும். நல்ல நேரத்தில் ஒரு விஷயத்தை ஆரம்பித்து விட்டால் அதைத் தொடர்ந்து செய்யலாம். சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் ஓரளவு சமாளித்து விடலாம். குரு பெயர்ச்சியும் தசா புத்தியும் ஒரு சேர நன்றாக இருக்கும் போது வாழ்க்கையில் முன்னேற்றமே. புதிய முடிவுகளை இந்த காலகட்டத்தில் எடுக்கும் பொழுது ஜாதகம் பார்த்து முடிவு செய்வவயும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 10, 12, 2 ஆகிய இடங்களில் படுவதால் ஏராளமான நன்மைகளும் நடைபெறும். உங்கள் ராசிக்கு குரு 3, 12க்கு உடையவர், அவர் 6ல் மறைகிறார். இது அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் குரு பகவானின் 10, 12, 2 இடங்கள் பார்வையால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சுப பலன்கள் கிட்டும். 12ம் இடத்தை குரு பார்ப்பதால் சையன, போஜன, போக சுகம், ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. 2ம் இடத்தை குரு பார்ப்பதால் குடும்பம் விருத்தி பெரும், தன வசதி பெருகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். ஒரு சிலருக்கு எழுத்தார்வம் கூடும். நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் நல்ல உதவியும் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவும் கிட்டும். பெண்களுக்கு நல்ல குடும்பம் அமையும். குடும்பத்தினர் அனைவருக்கும் நல்லது நடக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை, வெளிநாடு யோகம் போன்றவை அமையும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட சுப காரியங்கள் நடைபெறும். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். 6ல் உள்ள குரு பகவான் எப்படி பார்த்தாலும் பல வகையில் நன்மைகளை செய்து இந்த குரு பெயர்ச்சியை உங்களுக்கு சாதகமாக மாற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831