மீன ராசி அன்பர்களே, மீன ராசிக்கு இதுவரை 3ம் இடத்தில மறைவு பெற்றிருந்த குரு இப்பொழுது 4ம் இடத்திற்கு வருகிறார். 2025 மே மாதம் பிறகு ஒரு வருடத்திற்கு நிதான போக்கை கடைபிடிக்க வேண்டும். பெரிய ஏற்றம் எதுவும் நடக்காது. எந்த விஷயமும் சுமாராகத்தான் நடக்கும். எனவே புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். பண விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். செய்து கொண்டிருக்கும் வேலையை தொடர்ந்து செய்ய முயற்சி செய்யவும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று தாமதமாகும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கும் வருமானம் திருப்திகரமாக இருக்காது. அடிக்கடி வேலையில் மாற்றம் ஏற்படும். திருமணம் ஆகாதவளுக்கு திருமணம் தாமதப்படும். புதிய முயற்சிகளை செய்வதற்கு முன் ஜாதகம் பார்த்து செயல்படவும். பெரிய பணத்தொகை சார்ந்த விஷயங்களை கவனமாக கையாளவும். மீன ராசிக்கு 4ம் இடமாகிய மிதுனத்திற்கு வரும் குரு 8, 10, 12 ஆகிய ராசிகளை பார்க்கவிருக்கிறது. குரு 8ம் வீடான துலாத்தையும், 10ம் வீடான தனுசுவையும், 12ம் வீடான கும்பத்தையும், பார்க்க போகிறது. இக்காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். குரு பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது படுவதால் தொழில் வளர்ச்சி குறிப்பிட்டு சொல்லும்படி மிக மிக சிறப்பாக இருக்கும். விட்டுப்போன தொழிலை மீண்டு ஆரம்பித்து வெற்றி காண முடியும். குருவின் 5, 7, 9ம் பார்வைகள் மிதுன ராசிக்கு 8, 10, 12ம் வீடுகளில் விழுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்ற சொல்லுக்கு ஏற்ப 8, 10, 12ம் வீடுகள் சிறப்பாக அமையும். பொதுவாக 7, 10க்கு உடைய குரு 4ல் இருந்து கேந்திரபத்திய தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் 10க்கு உடைய குரு 4ல் அமர்ந்து தன வீடான 10ம் இடத்தை பார்ப்பது யோகமே. ஆகையால், குரு யோகத்தை மட்டுமே கொடுக்கும். கெடு பலனை கொடுக்காது. வேலை இல்லாதோருக்கு வேலையும், வேளையில் இருப்போர்க்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, கெளரவம், புகழ் ஆகியன கிடைக்கும். வீடு வாகனம் நிலம் போன்ற வசதிகளும் அமையும். புதிய நண்பர்களின் சேர்க்கை கிட்டும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த தொழில் விருத்தி அடையும். 12ம் இடமாகிய விரய ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். திருமணம், வீடு கட்டுதல், பிள்ளைகளின் படிப்பு போன்ற காரணங்களுக்காக இருக்கலாம். நீண்ட நாள் எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் கைகூடும். 8ம் இடமாகிய மாங்கல்ய ஸ்தானத்தையும், 12ம் இடமாகிய அயன சயன ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் திருமணங்கள் இனிதே நடைபெறும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831