மேஷ ராசி அன்பர்களே, மேஷ ராசிக்கு இது வரை 2ம் இடத்தில இருந்து மிகவும் அற்புதமான பலன்களை தந்து கொண்டு இருந்த குரு இப்போது ராசிக்கு 3ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பாக அமையும் என்று சொல்லிவிட முடியாது. மேலும் 3ம் இடமாகிய மறைவு ஸ்தானத்திற்கு குரு வருவது பொதுவாக நன்மை தர கூடியது அல்ல. 2025 மே மாதத்தில் இருந்து அடுத்த ஒரு வருடத்திற்கு அனுகூலம் இல்லை. மேலும் ஏழரை சனி ஆரம்பம் வேறு. எனவே உங்களை படாத பாடு படுத்தி விடும். கிட்டத்தட்ட 2026 வரை தொந்தரவு உள்ளது. எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. குரு பெயர்ச்சி 2025 to 2026 வரைக்கும் கவனம் தேவை.குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களுக்கு கிடைப்பதால் மிக பெரிய நன்மைகள் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய பாவங்களுக்கு உரியவர். குரு 6க்கும் 9க்கும் உடையவர். அவர் மூன்றாம் இடத்தில மறைவதால் யோகம் என்று சொல்லலாம். 9க்கு உடையவர் 9ம் இடத்தை பார்ப்பதும் யோகம் தான். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் கைகூடும். திருமண ஆனவர்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் மிக பெரிய பாக்கியங்கள் ஏற்பட போகிறது. நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர்பார்த்த உயர் பதவிகள் இப்போது கிடைக்கும். லாப ஸ்தானமாகிய 11ம் இடத்தை குரு பார்த்துக்கொண்டு இருப்பதால் பொருளாதார ரீதியாக இருந்த அணைத்து தடைகளையும் உடைத்து எரிய முடியும். வாங்கிய கடனை திரும்ப அடைக்கவும் வழி கிடைக்கும். செல்வ செழிப்பு மிகுதியாகும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும். யோகா, தியானப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட கால தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். புண்ணிய தலங்களுக்குப் போய்வர சுபச்செலவு உண்டாகும். வீட்டிலும் குடும்பத்திலும் சுபமங்களச் செலவுகள் உண்டாகும். சொந்தக்காரர்கள்- சுற்றத்தார்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். தொழில் வருமானம் அதிகமாக கிடைக்கும். பெரியோரின் அன்பும் ஆசியும் கிடைத்து குரு பெயர்ச்சியை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளவும். உங்கள் ஜனன கால தசா புத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் ஓரளவு நன்மை கொடுக்கும். புதிய விஷயங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜாதகம் பார்த்து முடிவு செய்யவும்.
( For Mesham : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831