ரிஷப ராசி அன்பர்களே, ரிஷப ராசியில் இருந்து வந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார். இது மிகவும் சிறப்பான இடம். தனஸ்தானம், வாக்குஸ்தானம், குடும்பஸ்தானம் ஆகியவற்றில் குரு இருப்பது சிறப்பான பலனை தரும். பண வரவு அதிகரிக்கும். செல்வ செழிப்பு ஏற்படும். வீடு வாகன யோகம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். இது ஒரு அற்புதமான காலகட்டம். நல்ல நேரம் வரும்பொழுது இதை பயன்படுத்திக்கொள்ளவும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கப் போகிறது. இனி உங்களுக்கு எல்லா அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். இருப்பினும் உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த குரு பெயர்ச்சி பலன்களை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும். இந்த வேளையில் மன உறுதியுடன் தைரியமான முடிவுகளை எடுக்க இயலும். உங்களின் பேச்சுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை இருக்கும். காதல் விவகாரங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் கைகூடும். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியாகிய குரு 2ம் இடத்தில மிதுனத்திற்கு வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆயுள் பலம் விருத்தி ஆகும். புத்திரர்களால் நன்மையே நடக்கும். 2ம் இடத்தில 6, 8, 10ம் பாவத்தை பார்ப்பார். 6ம் இடத்தை பார்ப்பதால் பகைமை விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். கடன்கள் நிவர்த்தியாகும். 8ம் இடத்தை பார்ப்பதால் ஆயுள் பலம் கூடும். ஆரோக்கியம் மேம்படும். தடைகள் விலகி காரியம் கைகூடும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு உத்தியோகம் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் வளர்ச்சி அடையும். எப்படி பார்த்தாலும் 2ம் இடத்தில இருக்கும் குரு நல்லதையே செய்வார் என உறுதியாக நம்பலாம். உங்கள் ஜனன காலா தசா புக்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் ஓரளவு நன்மை கொடுக்கும். புதிய விஷயங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜாதகம் பார்த்து முடிவு செய்யவும்.
( For Rishabam : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831