சிம்ம ராசி அன்பர்களே, சிம்ம ராசிக்கு இதுவரை 10ம் இடத்தில் இருந்து தொழிலில் பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தந்த குரு இப்போது உங்கள் ராசிக்கு யோகத்தை அளிக்க கூடிய 11ம் இடமான லாப ஸ்தானத்தில் வருகிறார். உங்கள் ஜென்ம ராசி அடிப்படையில் 11-ம் வீடு லாப ஸ்தானமாகும். இந்த லாப ஸ்தானத்திலே குரு பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு குபேர யோகம் ஏற்படும். திருமணம் ஆகாதவளுக்கு திருமணம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்வு ஏற்படும். பொருளாதாரம் உயரும். வருமானம் உயரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பத்தாம் வீட்டு குரு உங்களுக்கு நன்மை செய்யவில்லை. இனி பதினோராம் வீட்டு குரு உங்களுக்கு பல நன்மைகளை செய்யப் போகிறார். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களுக்கு நல்லது நடக்க போகிறது. குரு எந்த ராசிக்கும் 11ம் இடத்திற்கு வந்தால் அது யோகம் தான். அதிலும் சிம்ம ராசிக்கு அதிக நன்மைகள் செய்யும் கிரகமான குரு இப்பொழுது 11ம் இடத்திற்கு வருவதால் இரட்டிப்பு பலனை தருவார். இப்போது நீங்கள் எந்த முயற்சியில் இறங்கினாலும் அது வெற்றி தரும். லாப ஸ்தானத்திற்கு குரு வரும்போது எல்லா நன்மைகளையும் எதிர்பார்க்க முடியும். குரு உங்களுக்கு 2, 5க்கு உடையவர். குரு லாப ஸ்தானத்தில் அமர்வது மிகவும் நல்லது. லாபகரமான தொழில் அமையும். தொழில் மென்மேலும் விருத்தி அடையும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். பணக்கஷ்டம் வராது. வீடு வாகனம் ஆகிய வசதி ஏற்படும். பல விதத்திலும் வருமானம் கிடைக்கும். குரு 3, 5, 7ம் இடங்களை பார்க்கிறார், இதனால் சகோதர வகையில் நன்மையையும் பூர்வ புண்ணிய பலமும் களத்திர வகையில் நன்மையையும் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிடைக்கும். மனைவி வழியில் எதிர்பாராத பண வரவு ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் காதல் வயப்பட்டு வெற்றிபெறுவார்கள். சிலரின் காதல் திருமணத்தில் முடியும். சொந்த தொழில் வளர்ச்சி அமோகமாக உள்ளதால் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததே.
( For Simmam : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831