துலாம் ராசி அன்பர்களே, துலாம் ராசிக்கு இது வரை 8ம் இடமான ரிஷப ராசியில் இருந்து கொண்டு பல வகையிலும் தடைகளை ஏற்படுத்தி கொண்டு இருந்த குரு பகவான் இப்போது 9ம் இடமான மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 9ம் வீட்டிற்கு குரு பெயர்ச்சியான பிறகு பொருளாதாரம் உயரும். (குரு ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்) வீடு வாகன யோகம் ஏற்படும். நினைத்த விஷயங்கள் கைகூடும். பூர்வீகம் சார்ந்த விஷயங்கள் நன்மை தரும். உங்கள் சுய ஜாதகப்படி தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த குரு பெயர்ச்சி பலன்களை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல யோகமான காலம். வேலை உத்தியோகத்தில் வருமானம் உயரும். பதவி உயர்வு ஏற்படும். கௌரவம் புகழ் கிடைக்கும். நண்பர்கள் உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குரு உங்களுக்கு நன்மை செய்யாத கிரகமாக குரு இருந்தாலும், அதன் பார்வை நிச்சயமாக நன்மைகளை மட்டுமே செய்யும். குரு பெயர்ச்சியின் மூலமாக உங்கள் ராசிக்கு குரு பார்வை கிடைக்கிறது. குரு தான் நின்ற வீட்டைவிட்டு தான் பார்க்கும் வீடுகளுக்கே அதிக நன்மை செய்யும். உங்களுக்கு 3, 12க்கு உடைய குரு 9ல் வருகிறார். 3ம் அதிபதி என்ற வகையில் 9ல் இருக்கும்போது தெய்வ பக்தி, பூர்வ புண்ணிய பலத்தால் சகல சுகமும், உடன் பிறப்புகள் ஆதரவும், நெருங்கிய உறவினர்களின் உதவியும், தூர தேச பயணங்களும் அதன் மூலம் ஆதாயங்களும் ஏற்படும். திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தந்தையின் அன்பும் ஆதரவும் கிட்டும் அதே போல 12க்கு உடையவர் 9ல் இருப்பதால் நல்ல சம்பாத்தியம் ஏற்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் கிடைக்கும். கௌரவமும் அந்தஸ்தும் வரும். பொதுவாக 9ல் குரு நல்லது செய்வார். 9ல் இருக்கும் குருவால் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடும், குல தெய்வ வழிபாடும் பலனை முழுவதுமாக தரும். தெய்வ காரியங்களுக்காக பணம் நிறைய செலவு செய்ய வேண்டியது வரும். உங்கள் காரியங்கள் எதுவானாலும் அனைத்தும் வெற்றி பெரும். எதிர்பாராத திடீர் யோகம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். பெற்றோர்களின் உடல் நலன் சீராக இருக்கும். இது வரை குழப்பத்தில் தவித்துக்கொண்டு இருந்த நீங்கள் குரு அருளால் எதையும் துணிந்து செய்ய முற்படுவீர்கள். குரு மாறுதல் உங்கள் ராசிக்கு சிறப்பான பலனை தரும். எப்படி பார்த்தாலும் இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையில் முன்னேற நல்ல வாய்ப்பினை தரும்.
( For Thulam : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831