விருச்சிக ராசி அன்பர்களே, விருச்சிக ராசிக்கு இதுவரை 7ம் இடத்தில இருந்து ராசியை பார்த்து கலப்படமான பலன்களை தந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு 10ம் இடமான மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ஜென்ம ராசி படி 8ம் வீடு குரு அஷ்டம குருவாகும். இந்த காலகட்டம் உங்களுக்கு நன்மை தராது. புதிய முயற்சிகளை இந்த காலகட்டத்தில் செய்ய வேண்டாம். மேலும் உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் மட்டும் சமாளித்து விட முடியும். யாருக்கும் கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் வீண் பிரச்சனைகளை கொடுக்கும். தேவையான செலவுகளை மட்டும் செய்யவும். வெளியிடங்களில் மதிப்பு மரியாதை அவ்வளவாக கிடைக்காது. எனவே புதியவரிடத்தில் பழகும் போது கவனமாக இருக்கவும். உற்றார் உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படும். எனவே குலதெய்வ வழிபாடு செய்யவும் எல்லாம் நன்மையாக நடக்கும். தெய்வ வழிபாடு செய்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எந்த ஒரு புதிய முடிவுகளையும் ஜாதகம் பார்த்து முடிவு செய்யவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் தாமதம் ஆகும். தொழில் வேலை ஓரளவு சீராக செல்லும். புதிய தொழில் புதிய வேலை தான் உங்களுக்கு நன்மை தராது. மற்றபடி பழைய வேலையை தொடருங்கள். 8ல் குரு இருக்கப்போவதால் மிக பெரிய நன்மைகளும் இல்லை தீமைகளும் இல்லை. 8ம் இடத்தில் குரு மறைவு பெறுவதை கண்டு பயப்பட தேவையில்லை. 8ல் குரு வருவது சற்று சிரமமான நேரம் தான். குரு உங்கள் ராசிக்கு 12, 2, 4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இதன் பயனாக சில நன்மைகள் ஏற்படும். 2ம் இடத்தையும் 12ம் இடத்தையும் குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். குரு தனது சொந்த வீட்டையே பார்ப்பதால் தனஸ்தானம் வலுப்பெறுகிறது செல்வ செழிப்பு அபாரமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சர்ச்சைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதின் மூலம் சிலருக்கு கணிசமான தொகை கைக்கு வரும். 4ம் இடத்தை குரு பார்ப்பதால் வசதியான வீட்டிற்கு மாற வாய்ப்பு உள்ளது. சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும். மனைவி வழியில் சொத்துக்கள் கிடைக்கும். அயல்நாட்டு பயணங்கள் மேற்கொள்ளவும் அதற்க்கான வாய்ப்புகளும் உருவாகும். அடிக்கடி பயணங்களால் நன்மையையும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும், தாய் வழி உறவுகளின் உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது. 8ம் இடது குருவால் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும் பெரிய பிரச்சனை ஏதும் வர வாய்ப்பில்லை.
( For Viruchikam : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831