DANUSU Guru Peyarchi Palan
தனுசு ராசி நேயர்களே, (தனுசு ராசிக்கு குரு ராசியின் அதிபதியாகும்.) குரு உங்கள் ராசிக்கு 8ம் வீடான ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். இது வரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்த குருபகவான் 26-05-2026 முதல் 8-ம் இடத்திற்கு செல்கிறார். எட்டாமிடம் என்றாலே சற்று கஷ்டமான இடம் தான். அஷ்டமத்தில் குரு இருந்தால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும், இருப்பினும் குருவின் பார்வை உங்கள் ராசியின் முக்கிய இடத்திற்கு கிடைப்பதால் பல நன்மைகள் நடக்கும். குரு பகவான் 8 ஆம் வீட்டில் மறைவதால், அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். குடும்ப வருமானத்திற்கு குறை இருக்காது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், மனப் பக்குவமும் வரும். உங்களின் பலவீனங்களை நன்கு உணர்ந்து பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்ளவும். அறிவு பூர்வமாக சிந்தித்து பல முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். கடன் பிரச்னை அவ்வப்போது இருக்கும். சந்தேக குணத்தையும், ஈகோவையும் சற்று ஒதுக்கி வைக்கவும். குடும்பம் நலம் பெறும். குடும்ப விவகாரத்தில் மற்றவர்கள் கருத்து சொல்ல அனுமதிக்க வேண்டாம். எதிர்பாராத செலவுகளும், வழக்கால் நெருக்கடிகளும் வேலைப்பளுவும் உண்டு. சொத்து வரியை உரிய நேரத்தில் செலுத்தி பயன் பெறவும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். கொடுத்த வாக்குறுதியை சிறிய தடங்கலுக்கு பின் நிறைவேற்ற முடியும். கடுமையான முயற்சிக்கு பின் பணம் வரும். எதிர்பாராத வகையில் பண விரையம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். ஒரு சில உடல் உபாதைகள் வர வாய்ப்புண்டு, அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அறிவுப்பூர்வமாக சிந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிவரும். பழைய கடன்களை நினைத்து அவ்வப்போது கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும், டென்ஷனும் ஏற்படும். சொத்து வழக்குகளில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். வேண்டாதவர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. எல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளவும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்காமல் போகலாம். வாகன வசதிகள் பெருகும். தாயாரால் சில செலவுகளும், அலைச்சலும் ஏற்படும். புது வீட்டிற்கு குடியேற முடியும். வேற்று மதத்தினரின் உதவியும் ஆதரவும், கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற பல சலுகைகள் கிடைக்கும். மேலும் உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும். இந்த குரு பெயர்ச்சியில் ஆரம்பத்தில் நிறைய தடைகளை சந்தித்தாலும் நாளடைவில் நல்லது நடக்க ஆரம்பிக்கும் என்பது உன்மை.
பரிகாரம் : தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். தொலைந்த வாழ்க்கை திரும்பக் கிடைக்கும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831