KANNI Guru Peyarchi Palan
கன்னி ராசி நேயர்களே, (கன்னி ராசிக்கு குரு நான்காவது மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதியாகும்.) குரு உங்கள் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். இதுவரை இருந்து 10-ம் இடத்தில் இருந்து வந்த 26-05-2026 முதல் 11-ம் இடத்திற்கு செல்கிறார். (11-ம் இடம் என்பது லாப ஸ்தானம்) 11-ம் இடத்தில் குரு அமர்வது மிகவும் விசேஷமான பலனை தரும். 11-ம் இடம் வெற்றியை குறிக்கும் இடம் என்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். குரு பகவான் 11-ம் இடத்திற்கு வருவது பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். குருபகவான் 11 ஆம் இடத்தில் அமர்வதால், நிறைய நல்லது நடக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் வெற்றியையும், குடும்பப் பிரச்னைகளுக்கான நல்ல தீர்வுகளையும் லாப ஸ்தான குரு தந்தருள்வார். கடனை அடைக்க முடியும். வீடு கட்டும் பணிகளில் இருந்த தடைகள் நீங்கி மீண்டும் துவங்கும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமணம் கூடி வரும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் எப்பொழுதுமே சந்தோஷம் நிலைத்து இருக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அனுகூமுறையால் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். விலகி நின்ற நண்பர்கள் மீண்டும் வந்து நட்பு பாராட்டுவர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். உடன்பிறந்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். உடன்பிறப்புகளுக்கிடையே நல்லுறவு ஏற்படும். உடல் நிலையும், மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். காதல் கைகூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் லாபகரமாக இருக்கும். உங்கள் கடுமையான முயற்சியால் பல வெற்றி கள் குவியும் எதிரிகளின் இடையூறுகளை தைரியமாக எதிர்கொள்ள முடியும். பொருளாதாரம், சமூக அந்தஸ்து உயரும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த குலதெய்வ வழிபாடு, தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். இந்த குரு பெயர்ச்சியில் நல்லது, கெட்டதும் கலந்து நடப்பதால், சுமாரான பலன்களே எதிர்பார்க்கலாம்.
பரிகாரம் : விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வினைகள் தீரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831